என் தூதனானவர் உனக்கு முன்னே செல்லுவார் MY ANGEL SHALL GO BEFORE THEE 53-0216 1.மாலை வணக்கம் நண்பர்களே. இருப்பதில் மகிழ்ச்சி [ஒலிநாடாவில் காலியிடம் ஆசி...இரண்டுமே வந்தபடியும் சென்றபடியுமிருந்தன, எனவே, சரி, அங்கே நம்முடைய அந்த அறை கொஞ்சம் சிறிதாக இருக்கும் என்று நான் நான் நினைத்தேன், ஆனால் நாங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறோம். இரண்டு அல்லது மூன்று பேர் ஒன்று கூடியிருக்கும் இடத்தில் தான் நம்முடைய அதிகமான ஆவிக்குரிய ஒன்றுகூடுதல்கள் நடக்கின்றன என்று உங்களுக்கு தெரியும், அவர் அங்கே இருக்கிறார். ஏதோவொரு காலத்தில் நாம் மிகவும் சிறிய குழுக்களாக, ஒரு விதத்தில் ஒரு சிறு வீட்டு ஜெப கூட்டங்களை (cottage prayer meeting) கொண்டிருந்ததை, பெரும்பாலும் எல்லா கிறிஸ்தவர்களாலும் ஏதோவொரு விதத்தில் நினைவுக்கூர முடியும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். நாம் சின்னஞ்சிறு கூட்டங்களை கொண்டிருந்தபோது, பரிசுத்த ஆவியானவர் நிஜமாகவே நம் மத்தியில் வந்து, நம்மை ஆசீர்வதிப்பார், அவ்விடங்களில்தான் நான் எனக்கான மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட நேரங்களை கொண்டு இருந்தேன். சிறிய சபையாக இருந்தாலும், “இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்” என்று அவர் அந்த வாக்குத்தத்தத்தை செய்திருக்கிறார் (மத்தேயு-18:20). 2. இன்றிரவு நான் ஒரு வேத பகுதியை வாசிக்க விரும்புகிறேன், அதன்பின் நாம் ஆரம்பித்து ஜனங் களுக்காக ஜெபிக்கலாம், ஏனெனில் அவர்கள் நம்மில் இது போன்ற ஒரு சிறு கூட்டமாக இருக்கிறார்கள், நம்மை குணப்படுத்துகிற தேவனுடைய சுகமளிக்கும் கிருபையும் வல்லமையும் இருக்கிறதான பரிமாணத்திற்குள்(realm) நாம் உடனடியாக வந்தாக வேண்டும். அதை செய்யும்படி அவர் வாக்களித்திருக்கிறார், அவருடைய சித்தத்தையும் நமக்கான அவருடைய தயவையும் வெளிப்படுத்துவதற் கென்று செய்யவேண்டிய எதையுமே அவர் செய்யாமல் விட்டதே இல்லை, எனவே நாம் அவரை விசுவாசித்தால் போதும். அது சரியல்லவா? இன்றிரவு யாத்திராகமம் 23-ஆம் அதிகாரம், 20-ஆம் வசனத்தில் இருந்து தொடங்கி, ஒரு வேதப்பகுதியை வாசிக்க விரும்புகிறேன், இது எப்பொழுதுமே எனக்கு மிகமிக பிடித்த ஒரு பகுதியாயிருக்கிறது. கூறினார்... வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம் பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டு போய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன். அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து... அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது. நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், நான் உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன். என் தூதனானவர் உனக்குமுன் சென்று... இப்பொழுது, ஒரு சில நிமிடங்களுக்கு ஒரு சிறு பொருளுக்காக நான் அந்த கடைசி பகுதியை அல்லது அந்தகடைசி வசனத்தின் முதல் பகுதியான, "என் தூதனானவர் உனக்கு முன்னே செல்லுவார்”, என்பதை எடுக்க விரும்புகிறேன். 3. தேவன் எல்லா காலங்களிலும், இடைப்படும்படியாக யாரோ ஒருவரை இங்கே பூமியில் கொண்டிருந்தார். பூமி அவரிடம் இருந்த நாள் முதல், அவர் தொடங்கினார்... அவர் தன் கையை நம்பிக்கையாய் வைத்து அனுப்பும் படியாக யாரோ ஒருவரை அவர் எப்போதுமே கொண்டு இருந்தாரே தவிர, அப்படி அனுப்புவதற்கென்று யாருமே இல்லை என்கின்ற ஒரு நேரம் அவருக்கு ஒருபோதும் இருந்ததே கிடையாது. இப்போது நான் வாசித்ததிலிருந்த இந்த காலப்பகுதியை குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கி றோம், அவர் இஸ்ரவேல் புத்திரர்களை இரட்சிக்கும்படி மோசேயை அனுப்பியிருந்தார்.. இப்பொழுது, அனுப்பப்பட்டது மோசே அல்ல. மோசே வெறும் அந்த கருவிதான். இப்பொழுது, என்னுடைய இருதயத்தில் நான் - தேவன் எப்பொழுதுமே மாறாதவராயிருக்கிறார் என்று விசுவாசிக்கிறேன். எல்லா காலங்களினூடாகவும், அவர் ஆதியில் எப்படி இருந்தாரோ அப்படியேதான் அவர் ஒவ்வொரு காலத்திலும் இருக் கிறார். அவர் பிதாத்துவத்தில் (Fatherhood) வெளிப்படுத்தப் பட்டார்; அவர் குமாரத்துவத்தில் (Sonship) வெளிப்படுத்தப் பட்டார். அவர் இப்பொழுது பரிசுத்த ஆவியின் யுகத்தில் (dispensation of the Holy Spirit) வெளிப்படுத்தப்பட்டுள்ளார். நாம் கிறிஸ்தவ யுகத்தில் (Christian dispensation) ஜீவித்துக் கொண்டிருக்கவில்லை, ஆனால் பரிசுத்த ஆவியானவரின் யுகத்தில் (the Holy Spirit dispensation) ஜீவித்துக்கொண்டிருக் கிறோம். அது சபையில் இருக்கும் அந்த - அந்த பரிசுத்த ஆவியானவரின் நடபடிகளாயிருக்கிறது, அவர்களுக்குள் இருக்கும் பரிசுத்த ஆவிக்கு சபையின் பிரதி செயல்களா இருக்கிறது (reactions). அற்புதமான நாளில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். எல்லா காலங்களையும் விட மகத்தானதில் இப்போது நாம் ஜீவித்துகொண்டிருக்கி றோம், சரியாக இந்த உலகத்தின் செயல்பாடுகளின் காட்சி முடிவடைகிற கட்டத்தில் இருக்கிறோம். நாம் அனை வரும் மிக நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்து வருகிற . ஏபிரேய தீர்க்கதரிசிகள் அந்த நாட்களினூடாக உரைத்த அந்த மகத்தான காலத்திற்குள் (great age) நுழைய ஆயத்தமாகிக்கொண்டிருக்கிறோம். 4. தேவன் எப்போதுமே அவரால் தன்னுடைய கரங்களை வைக்ககூடியதான யாரோ ஒருவரை அவர் கொண்டிருந் தார். இப்பொழுது, மோசே ஒரு அழகுள்ள பிள்ளையாய் பிறந்தான். அவன் அந்த - இஸ்ரவேலர்களை அவனுடைய வழிநடத்துதலில் வெளியே கொண்டுவர வேண்டுமென்று தேவன் நியமித்திருந்தார். அவன் அழைக்கப்பட்ட பிறகு, அவன் எகிப்திற்குள் செல்வதற்கு முன்பு, அவன் வனாந்தி ரத்தில் அந்த காலைவேளையில் தன்னுடைய மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை அவன் மேய்த்துக்கொண்டிருந்த போது, ஒரு முட்செடி எரிகிறதை கண்டான். இப்பொழுது, அதுதான் கர்த்தருடைய தூதனானவர் முதன்முதலில் காட்சியளித்ததாய் (appearance) இருந்தது என்று நான் விசுவாசிக்கிறேன். அவர் இந்த எரிகிற முட்செடியில் இருந்தார். அவர் மோசேக்கு கட்டளையிட்டு, அவன் என்ன செய்ய வேண்டுமென்று கூறிய பிறகு, அவனுக்கு முன்பாக அவர் எகிப்திற்குள் சென்றார். அவர்கள் வெளியே வந்தபோது, அவர் மீண்டுமாக அக்கினியின் வடிவில், ஒரு அக்கினி ஸ்தம்பமாக இருந்தார். இந்த அக்கினி ஸ்தம்பம் தான் இஸ்ரவேலின் புத்திரர்களை வழி நடத்தியது, அந்த எரிகிற முட்செடியில் இருந்த அந்த அதே தூதனானவர் தான் அது; அந்த எரிகிற முட்செடியிலிருந்த அந்த அதே அக்கினி ஸ்தம்பம் தான் அது. 5. அந்த அக்கினி ஸ்தம்பம், அல்லது அந்த தூதனானவர்தான், உடன்படிக்கையின் தூதனாயிருந்தார். அதுதான் உடன்படிக்கையின் தூதன் என்பதை எல்லா ஊழியக்காரர்களும் ஒத்துக்கொள்வார்கள் என்று நான் விசுவாசிக்கிறேன். அது அந்த உடன்படிக்கையின் தூதனாய் இருந்தால், பின்பு அதுதான் கர்த்தராகிய இயேசு; அதுதான் பரிசுத்த ஆவியாகிய தேவன் ஏனெனில் எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும், கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையையே அதிக ஐசுவரியம் என்று எண்ணி மோசே தேர்ந்தெடுத்தான்(எபிரெயர்-11:26). உங்களுக்கு புரிகிறதா? கிறிஸ்துவின்... அது லோகாஸாகிய (Logos) கிறிஸ்துவாய் இருந்தது, இஸ்ரவேல் புத்திரர்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்து வந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வழி நடத்தி சென்ற உடன்படிக்கையின் தூதனாயிருந்தது, அது வெறும் நிழலாட்டம் மட்டுமே. அவர் அதை அப்போது இயற்கையான விதத்தில் (natural) செய்தது போல, இன்றைக்கு அவர் அதை ஆவிக்குரிய விதத்தில் செய்கிறார். இப்பொழுது, அவர்களுடைய எல்லா தேவைகளையும் தருவதாக அவர் வாக்குத்தத்தம் பண்ணினார். அவர்களுக்கு தண்ணீர் தேவைப்பட்டபோது, அவர்கள் அதை கன்மலையிலிருந்து பெற்றுக்கொண்டார்கள். அவர்களுக்கு உணவு தேவைப்பட்டபோது, தேவன் அதை வானத்திலிருந்து வருஷிக்கும்படி பண்ணினார், காற்றினால் அதை கொண்டு வந்து சேர்த்தார். தண்ணீர்கள் கசப்பாயிருந்தபோது, அவர்கள் அதை மதுரமாக்கினார்கள். அவர்களுக்கு தேவையாயிருந்த ஒவ்வொன்றையும் அவர் அளித்தார். 6. பாளையத்திற்குள் வியாதி வந்தபோது அவர் ஒரு பாவநிவர்த்தியை (atonement) செய்தார். ஆபத்து காலத்தில் அனுகூலமான துணையான தேவனாய் இருப்பேன் என்று அவர் வாக்குத்தத்தம் பண்ணினார் (சங்கீதம்-46:1). அவர் இந்த காரியங்களையும் செய்து, அவர்களையும் முழுவதுமாக பார்த்துக்கொள்வதாக அவர் வாக்குத்தத்தம் பண்ணினார். இப்பொழுது, அவர் அப்போது இருந்ததுபோல... அப்படியேதான் இன்றும் இருக்கிறார். இஸ்ரவேலர்களை வழிநடத்திய அதே தேவனுடைய ஆவிதான் இன்றைக்கு சபையையும் வழிநடத்துகிறது, வனாந்திரத்திலிருந்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு கொண்டு வந்தது போல, நம்மையும் முழுவதுமாக அழைத்துக் கொண்டு செல்கிறார். நமக்கு ஒரு வாக்குத்தத்தம் பண்ணப் பட்ட தேசமிருக்கிறது, நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா: “என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணின பின்பு, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்வேன். ”(யோவான்-14:02) நாம் நம்முடைய வழியிலிருக்கிறோம். தேவன் நமக்கு வாக்குத்தத்தம் பண்ணின இந்த மகிமையான வாக்குத்தத்தம் பண்ணப் பட்ட தேசத்திற்கு நாம் சென்று கொண்டு இருக்கிறோம். 7. இப்பொழுது, இந்த யாத்திரை முழுவதிலும் நமக்கு தேவையாயிருக்கிற ஒவ்வொன்றையும் தருவதாக அவர் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார்: “என் நாமத்தினாலே பிதாவிடம் நீங்கள் எவைகளையெல்லாம் கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளையெல்லாம் நான் செய்வேன் (யோவான்-14:13,14). எவைகளை..” (மாற்கு-11:24) “நீங்கள் ஜெபம்பண்ணும் போது எவைகளை கேட்டுக் கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும். ’ இப்போது, இந்த முழு உலகத்திலும் இருப்பதிலேயே மிகவும் சக்திவாய்ந்த ஆயுதத்தை அவர் நமக்கு தந்திருக்கிறார், அதுதான் ஜெபம். ஜெபம்தான் காரியங்களை மாற்றுகிறது. சர்வவல்லமை யுள்ள தேவனுக்கு முன்பாக இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கிறிஸ்தவன் தன்னுடைய முழங்கால்களால் மண்டியிடும்போது அவனுக்கு என்னே ஒரு ஆற்றல்(force) இருக்கிறது என்பதை அவன் உணர்வதில்லை. அது என்னே- என்னே வல்லமையாயிருக்கிறது என்பதை அவன் உணருவதில்லை. ஜனங்களால் மாத்திரம் அதை... அவர்களுக்கு ஒப்புவிக்கப்பட்டதை மட்டும் உணர்ந்து கொள்ள முடிந்தால், அதை விசுவாசிக்கும்படியான போதுமான விசுவாசத்தை மட்டும் நீங்கள் பெற்றிருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வது எதுவோ அது உங்களுக்கு அளிக்கப்படும், ஏனெனில் தேவனுடைய வார்த்தை உண்மையாயிருக்கிறது. 8. இப்பொழுது, தேவனுடைய வார்த்தையானது சாத்தானை எங்கும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் தோற்கடிக்கும். இப்பொழுது, இயேசு இங்கே பூமியில் இருந்தபோது, அவர் பூமியிலிருந்தார் என்பதை நான் - நான் விசுவாசிக்கிறேன், நல்லது, அவர் இம்மானுவேலாக இருந்தார். தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்து உலகத்தை தமக்கு ஒப்புரவாக்கினார் (2கொரிந்தியர்-5:19). எனவே குமாரனாகிய கிறிஸ்து இயேசு இங்கே பூமியிலிருந்தபோது பிதாவின் எல்லா மகத்தான நற்பண்புகளும் அவருக்குள் இருந்தது. பிதாவிடம் இருந்தது எல்லாம் அவருடையதாக இருந்தது. தேவனில் இருந்த எல்லா அருமையான வரங்களும், மேலும் இருந்த எல்லாமுமே, கிறிஸ்துவுக்குள் இருந்தது. ஆனால் அவர் சாத்தானை சந்தித்தபோது, அவர் அந்த வரங்களில் ஒன்றையுமே ஒருபோதும் பயன் படுத்தவே இல்லை. அவர், உனக்கு முன்மாதிரியாய் இருக்கும்படி, அவர் அதை மிகமிக பெலவீனமான கிறிஸ்தவர்களிடம் கொண்டு வந்தார்... அவர் கூறினார்... இப்பொழுது, சாத்தானை கடிந்துகொண்டு அவனை துரத்தும்படியான வல்லமை சரியாக அப்பொழுது அவர் -- அவரிடமிருந்தது. ஆனால் அவர் என்ன செய்தாரென்றால், அவர் தன்னுடைய வல்லமையில் எதையுமே ஒருபோதும் சுட்டிக்காட்டவே இல்லை. சாத்தான், “நீர் தேவனுடைய குமாரனேயானால்..” என்றான். தேவனுடைய வார்த்தைக்கு மேலே சாத்தான் எப்போதுமே ஒரு கேள்விகுறியை வைக்கிறான். எனவே அவன், “நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்த கல்லுகள் அப்பமாகும்படி கட்டளையிடும்” என்றான். இப்பொழுது, இயேசு, “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரம் பிழைப்பதில்லை, என்று பிதாவினுடைய வார்த்தையில் எழுதியிருக்கிறதே” என்றார். அவன் அவரை அந்த - அந்த தேவாலயத்தின் உச்சியின் மீது கொண்டுபோய் கூறினான் - அவரை தாழக்குதியும் என்றான். இயேசு, “அது எழுதியிருக்கிறதே...” என்று மீண்டும் சரியாக வேத வாக்கியத்தையே கூறினார். பின்பு அவன் அவரை ஒரு மலையின் மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் காண்பித்து, “நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னை பணிந்துகொண்டால், அவைகளை தருவேன்” என்றான். இயேசு, ‘“அது எழுதியிருக்கிறதே...” என்றார். பாருங்கள், தொடர்ந்து, “அது எழுதியிருக்கிறதே; அது எழுதியிருக்கிறதே. " (மத்தேயு-4:3-10, லூக்கா-4:3-9,12) 9. அப்படியானால் நீங்கள் சாத்தானை வேதவாக்கியத்தை கொண்டு அடிக்கும்போது, அவனால் இயன்றமட்டும் அவன் வல்லமை இழந்தவனாகி விடுகிறான். பாருங்கள்? நல்லது, ஏதேனும், அது என்னவாயிருக்கிறது என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல... இப்பொழுது, அது என்னி டமோ அல்லது உங்களுடைய பாஸ்டர் ஜெபிப்பதிலோ இல்லை... அது உங்களுடன் சேர்ந்து நாங்கள் ஜெபிக்க வேண்டியதாயிருக்கிறது, ஆனால் சுகமளித்தலை செய்வது என்பது உங்களுடைய தனிப்பட்ட விசுவாசமாய் இருக்கிறது. இப்பொழுது, அந்த ஒரு... முதலாவது பிதா அதை குறித்து காண்பிக்கும் வரை இயேசு ஒருபோதும் யாரையுமே சுகப்படுத்தவே இல்லை. இப்பொழுது, கடந்த இரவு நாம் அதை யோவான் 5-ஆம் அதிகாரம் 19-ஆம் வசனத்தில் பார்த்தபடியே அவர் அதை கூறினார். "மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிற தெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்.” இரண்டு குருடர்கள் அவரை வீதியிலே பின்தொட ருவதை கவனியுங்கள். அவர்கள் குருடாயிருந்தார்கள், “எங்கள் மீது இரக்கமாயிரும். எங்கள் மீது இரக்கமா யிரும். ” என்று உரக்க கத்தினார்கள். அவர் நிற்காமல் நடந்து சென்று விட்டார். அவர் அந்த வீட்டிற்குள் வந்தபோது, அவர்கள் அந்த குருடனை அவரிடம் அழைத்துவந்தார்கள். அந்த குருடன், “எங்கள் மீது இரக்கமாயிரும்” என்றான். அவர், “நீவிசுவாசிக்கிறாயா?” என்று கேட்டார். அவன், “ஆம்” என்றான். அவர் அவர்களுடைய கண்களை தொட்டு, “உங்கள் விசுவாசத்தின்படியே... என்றார். அது சரியல்லவா? “உங்கள் விசுவாசத்தின்படி- படியே, உங்களுக்கு ஆகக்கடவது.” பாருங்கள்? அவர்களிடம் விசுவாசம் இருந்தது. (மத்தேயு-9:27-29, 20:30-34) அந்த ஸ்திரீ அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள், அவர், “உன் விசுவாசம் (என்னுடைய வல்லமையல்ல), உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது. ” பாருங்கள், பாருங்கள்? "உன் விசுவாசம்...பாருங்கள், என்ன... ஆனால் அவரோ சென்று பிதா அவருக்கு காண்பித்ததை மாத்திரமே செய்தார். (மத்தேயு-9:20.22)(மாற்கு-5:27,28,34) 10. இப்பொழுது, இன்றைக்கு அவருடைய ஆவி நம்மிடம் இருக்கிறது. பிதா காண்பிக்கிறது எதுவோ அதை அது வெளிப்படுத்துகிறது. அது ஏற்கனவே செய்து முடிக்கப் பட்டு விட்டது. உங்கள் ஜெபம், உதாரணத்திற்கு, அங்கே ஜெபித்துக்கொண்டிருக்கலாம். நீங்கள் அங்கே உட்கார்ந்து ஜெபித்துக்கொண்டிருக்கலாம், பிதா எதை தீர்மானிக்கி றாரோ அதனிடமாக, உங்களுடைய விசுவாசமானது மேலே எழும்பி ஒரு அடைப்புக்குறிக்குள்(bracket) சென்று, “ஆம், நான் அதை சரியாக இப்போது விசுவாசிக்கிறேன். நான் அதை சரியாக இப்போது ஏற்றுக்கொள்கிறேன். நான் அதை சரியாக இப்போது விசுவாசிக்கிறேன்” என்று கூறும். இப்பொழுது, பிதா உடனே திரும்பி என்னிடமாக, “நான் அவனுக்கு செவிகொடுத்தேன் என்றும், அவனுக்கு குறிப்பிட்ட காரியம் இருந்தது என்றும், அது சரியாகி விட்டது என்றும் அவனிடம் சொல்” என்று கூறுவார். பாருங்கள்? ஆனால் அதை என்னால் சுயமாய் செய்ய முடியாது. அது சரியாகிவிட்டது என்று அவர் கூறினால் மாத்திரமே அது சரியாகி விட்டது என்று என்னால் கூற முடியும். பாருங்கள்? நான் கூறுவது உங்களுக்கு புரிகிறதா? இப்பொழுது, அது அவர் நேற்றும், இன்றும்... மாறாதவர் என்பதை காண்பிக்கிறது. உங்களுக்காக என்னால் ஜெபிக்க முடியும், உங்களுடைய விசுவாசத்தின்படியே உங்களுக்கு ஆகக்கடவது. ஆனால் உங்களிடம் கூறும்படி அவர் ஏதோவொன்றை என்னிடம் சொன்னால், அங்கிருந்து தெய்வீக வரத்தின் மூலம் ஒரு செய்தியை என்னால் கொண்டு வந்து, அவர் என்ன கூறினார் என்று உங்களிடம் சொல்ல முடியும். வெவ்வேறு ஜனங்களில் இருப்பது போல; அந்த சாட்சிகளை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். சாட்சிகளை கொண்டுவர நான் முயற்சிப்பதில்லை, ‘ஏனெனில் சில சமயங்களில் திரு. பாக்ஸடர் (Baxter) அவைகளை கொண்டுவருவதால்; அவைகளுக்கே நான் மீண்டும் வந்துவிடுகிறேன். பெரிய மனிதர்கள், காங்கிரஸ் மனிதர் உப்ஷாவை பற்றியும், மற்றவர்களை பற்றியும், பல்வேறுபட்ட நபர்களை பற்றியும், ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் பற்றியும், அவர் என்ன செய்தார் என்பதை பற்றி ஆயிரக்கணக்கான சாட்சிகளை உலகத்தை சுற்றிலும் அநேகர் கேள்விப்பட்டிருக்கிறார்கள். பின்பு அவர்கள் சுகமானபோது (உங்களுக்கு புரிகிறதா?), அவர் பேசி, ஒரு குறிப்பிட்ட காரியத்தை சொல்லுவார், நான்... அது என்னவாக இருந்தாலும் பொருட்டல்ல, ஒவ்வொரு முறையும் அது அப்படியே நடக்கும். இப்பொழுது, உங்களுக்கு எங்கே வேண்டுமோ அங்கே அதை எடுத்து செல்லுங்கள், எந்த மனிதனும் சுதந்திரமா யிருக்கிறான், அதாவது அவர்கள் எந்த நேரத்திலாவது அது, “கர்த்தர் உரைக்கிறதாவது” என்றோ அல்லது “கர்த்தருடைய நாமத்தினால்" ஒரு குறிப்பிட்ட காரியம் நடக்கப் போகிறது என்றோ எப்போதாவது கூற கேட்டிருந்தால், அது அப்படியே நடக்கும். பாருங்கள்? அல்லது தேசங்கள் முழுவதிலும் நான் எங்கேயெல்லாம் சென்றேனோ அங்கே எல்லாம் நீங்கள் தேடி பார்த்து, எப்போதாவது ஒரே ஒரு முறை அது, "கர்த்தர் உரைக்கிறதாவது” என்று கூறி எதையேனும் முன்னறிவித்திருந்து(predict) அது அப்படியே சரியாக அவ்விதத்தில் நிறைவேறாமல் இருந்திருக்கிறதா என்று பாருங்கள். அது ஒருபோதுமே தோற்றதில்லை. 11. முதல் முறை அது நடக்கையில், நிச்சயமாக நான் ஒரு சிறு குழந்தையாக இருந்தேன். அது உள்ளே வந்தபோது, நான் பிறந்து சுமார் மூன்று நிமிடங்கள் மட்டுமே ஆகியிருந்தது. ஆனால் வாழ்க்கை முழுவதிலும், ஒவ்வொரு முறையும், நான் மனந்திரும்புவதற்கு (converted) முன்பாகவே... வரங்களும் அழைப்புகளும் மனந்திரும் புதல் இல்லாமலே இருக்கிறது. (ரோம-11:29) அதை நீங்கள் அறிவீர்கள். அங்குதான் நான் நினைக்கிறேன் அந்த அநேகர்... பாருங்கள், நான் பெந்தெகொஸ்தே சபையில் புதிதானவானாயிருக்கிறேன். நான் பாப்டிஸ்டு சபையி லிருந்து வந்திருக்கிறேன். தெய்வீக வரம் என்ற ஒன்று இருக்கிறது என்பதை பாப்டிஸ்டு ஜனங்களால் காண முடியவில்லை. பெந்தெகொஸ்தே ஜனங்களோ அதை விசுவாசித்தார்கள். எனவே அங்குதான் தேவன் என்னை அனுப்பினார். அங்கு இருக்கும்போதுதான் நான் வீட்டில் இருப்பது போன்று உணருகிறேன். நான் உங்களில் ஒருவனாயிருக்கிறேன் (பாருங்கள்?), ஏனெனில் நான் பரிசுத்த ஆவியை பெற்றுள்ளேன், அதன்பின் தேவன் அந்த காரியத்தை எனக்கு பிரத்யட்சமாகும்படி செய்தார்; நான் ஆரம்பித்தேன். ஆனால் அந்த அந்த பகுதி நான் குழந்தையாய் இருந்தது முதலே இருக்கிறது. வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதல் இல்லாமலே இருக்கிறது. நீங்கள் அதில் விசுவாசம் கொண்டுள்ளீர்களா? நீங்கள் வேதவாக்கியத்தை விசுவாசித்தால்... (ரோம-11:29) தேவனுடைய குமாரனாயிருக்கும்படி இயேசு கிறிஸ்து முன்குறிக்கப்பட்டார். ஏதேன் தோட்டத்திலிருந்தே சர்பத்தின் தலையை நசுக்க வேண்டிய ஸ்திரீயின் வித்து அவர்தான் (ஆதி-3:15). நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? மோசே மோசேவாக இருந்தது அவனுடைய தீர்மானம் அல்ல. அவன் ஒரு அழகுள்ள பிள்ளையாய் பிறந்தான் (எபி- 11:23). அவன்தான் அது என்பதை அவர்கள் பார்த்து, அவன்தான் அது என்பதை அறிந்து கொண்டார்கள். தேவன் அவனை சரியாக பார்வோனின் மூக்கிற்கு நேராகவே வளர்த்தார், அவர் வளர்த்தாரல்லவா? அது உண்மைதானே? அது அவனுடைய தீர்மானமல்ல. யோவான்ஸ்நானன், அவன் பிறப்பதற்கு எழுநூற்று பன்னிரண்டு ஆண்டு களுக்கு முன்பே, வனாந்திரத்தில் கூப்பிடுகிறவனுடைய சத்தமாய் அவன் இருந்தான் (ஏசாயா-40:03). அது உண்மை அல்லவா? 12. தீர்க்கதரிசியாகிய எரேமியாவிடம்... தேவன், “உன் தாயின் கருவில் நீ உருவாகும் முன்னே, நான் உன்னை அறிந்தேன், உன்னை பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்கு தீர்க்கதரிசியாக கட்டளையிட்டேன்” என்று கூறினார் (எரே-1:05). அது சரிதானே? அவன் அவனுடைய தாயின் கருவிலிருந்து வெளிப்படுமுன்னே... பாருங்கள், வரங்களும் அழைப்புகளும் மனந்திரும்புதல் இல்லாமலே இருக்கிறது. பாருங்கள்? தேவனே அவைகளை தருகிறார். உங்களுக்கு நீல நிற கண்கள் இருப்பது உங்களுடைய தீர்மானமல்ல, "கவலைப்படுகிறதினாலே எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தை கூட்டுவான்.” (மத்-6:27)(லூக்- 12:25) ஆகவே அந்த காரியம் இன்றைக்கு உலகத்திற்குள் ஒரு கூட்ட “ism” - களுடன் நுழைந்திருக்கின்றன, உங்க ளுக்கு புரிகிறதா, நிச்சயமாக, அது தேவனுடைய அசலான காரியத்திலிருந்து எடுத்துப்போட முயற்சிக்கும், சாத்தானுடைய கிரியையே அல்லாமல் வேறொன்றுமில்லை. பெந்தெகொஸ்தே ஜனங்களாகிய நீங்களும், மற்ற எல்லா ஜனங்களும், பாப்டிஸ்டுகளும் அது போன்றவர்களும், அதைதான் காலத்தினூடாக கொண்டிருந்தீர்கள், எதுவென்றால் யாரோ ஒருவர் தாங்கள் ஒன்றுமே அறியாத ஏதோவொன்றை போலியாக பாவனை செய்வதையே கொண்டிருந்தீர்கள். சும்மா இருப்பதே நலம் “கவலைப்படுகிறதினாலே எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தை கூட்டுவான்.” நீங்கள் குறிப்பிட்ட ஒன்றாய் இருக்க வேண்டுமென்று தேவன் விரும்பினால், அதுவாக இருக்கும்படிக்கே தேவன் உங்களை இந்த பூமிக்கு கொண்டுவருகிறார், மேலும் நீங்கள் அதுவாகத்தான் இருப்பீர்கள். பாருங்கள்? அவர் உங்களை ஒன்றிற்காக - ஒரு காரியத்தை செய்ய அழைத்திருந்தால், உதாரணமாக ஒரு மனிதன் “நல்லது, நான் ஒரு பிரசங்கியாராயிருந்தால், என்னால் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என நம்புகிறேன்” என்று கூறினால். நீ ஒருபோதும் ஒரு பிரசங்கியாக இருக்கவே முடியாது. ஒரு பிரசங்கியாராக இருக்கும்படி தேவன் உன்னை அழைக்க வேண்டியவராயிருக்கிறார். கர்த்தர் அவனை அனுப்பா விட்டால், எப்படி ஒரு பிரசங்கியாரால் பிரசங்கிக்க முடியும். அது சரிதானே? அது எல்லாமே தேவனில் இருக் கிறது. ஒவ்வொன்றுமே சரியாக மீண்டும் தேவனுக்குள் செல்கிறது. அது சரிதானே? ஒவ்வொன்றும் சரியாக மீண்டும் அவரிடமே, அவர் திட்டமிடுகிறார். நாம் அப் படியே அந்த திட்டத்தின் வரிசையில் வந்து (உங்களுக்கு புரிகிறதா?) அதை நிறைவேற்றுகிறோம். 13. இப்பொழுது, ஒரு சில வருடங்களுக்கு முன்பு, சூரிய வெளிச்சத்தை தவிர வேறு ஏதேனும் வெளிச்சம் இருக்கிறது என்பதை எந்த ஜனங்களும் உறுதியாக நம்பவே இல்லை. முன்னொரு காலத்தில் குற்றம் சாட்டுபவர்களும் (Critics) அறிவியல் உலகமும் நகைத்து, “வேதாகமத்தை எழுதியபோது தேவன் ஒரு மோசமான தவறை செய்தாரல்லவா?” என்றார்கள். “அவர் சூரியனை உண்டாக்குவதற்கு முன்பே அவர் உண்டாக்கினார் - அவர் ஆகாய விரிவைfirmament) சிருஷ்டித்தார் என்று கூறினாரே” என்றார்கள். “அவர் சூரியனை உண்டாக்குவதற்கு முன்பு அவர் ஆகாயவிரிவை உண்டாக்கினார் என்பது, சூரிய வெளிச்சத்தை தவிர வேறொரு வெளிச்சம் என்று ஒன்றுமே இல்லை. அந்த எண்ணமே தவறு” என்றார்கள். மேலும் எப்படி அந்த அப்போஸ்தலன் உங்கள் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கிறது என்று கூறினான். நல்லது, தாழ்மையும் சிந்தனையுமுள்ள ஆவியுடன் (spirit of meekness and consideration) அறிவியலானது அதை பார்த்து, தோண்டி ஆராய்ந்து, தேவன் சரியானவர் என்பதை நிரூபித்தது. இப்பொழுது, சூரிய வெளிச்சத்தை தவிர அநேக வெளிச்சங்கள் இருக்கின்றன. உதாரணமாக, X-ray. அதில் இல்லை அதற்கும் சூரியனுக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் உங்கள் முழு சரீரமும், ஒவ்வொரு சின்னஞ்சிறு செல்களும், சின்னஞ்சிறு அணுக்களுமே வெளிச்சமாயிருக்கின்றன. நீங்கள் முழுவதுமே வெளிச்சத்தினால் செய்யப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் முழுவதுமே வெளிச்சத்தினால் செய்யப்பட்டு இருக்கிறீர்கள் என்பதில் வேதாகமம் சரியாயிருக்கிறது என்று அவர்கள் கண்டறிந்தார்கள், ஏனெனில் விஞ்ஞா னிகள், அதை இயற்கையான கண்ணோட்டத்தில் பார்க்க வில்லை, உங்களால் அதை புரிந்து கொள்ள முடியாது. [because scientists, not looking at it from a natural standpoint, you can't understant it] ஆவிக்குரிய காரியங்கள் ஆவிக்குரிய விதத்தில் நிதானித்து அறியப்படவேண்டும். எனவே ஆனால் அவர்கள் வேதாகமம் சரியானது என்பதை நிரூபித்தார்கள். 14. சில காலத்துக்கு முன்பு, ஒரு மனிதன் அந்த - அந்த மின்சாரத்தை கட்டுப்படுத்தி பயன்படுத்தலாம்(harnessed) என்பதை மிக உறுதியாக விசுவாசித்தார். அவர் தனக்கு ஒரு பட்டத்தை (kite) வாங்கி, அதின் வாலின் முனையில் ஒரு சாவியை (key) பொருத்தினார், ஆனால் இறுதியில் அவர் என்ன நினைத்தாரோ அதை பிடித்துவிட்டார், அவர் விசுவாசித்தது உண்மையாயிருந்தது, ஏனெனில்... ஜனங்கள் அவரை பார்த்து நகைத்தார்கள், ஆனால் அவரோ, அவருடைய இருதயத்தில் ஏதோவொன்று அது சரியானது என்று அவரிடம் கூறினது. எனவே அவர் அதினோடே தரித்திருந்தார். கொஞ்ச காலம் கழித்து, நமக்கு விளக்கில் மின்சாரத்தை கொடுத்த மனிதன், தாமஸ் எடிசன், மின்னணுவை (electronic) அல்லது மின்னாற்பகுப்பை (electrolysis) கம்பியின் மூலம் கடத்த முடியும் என்று விசுவாசித்தார். பத்தாயிரம் கம்பிகளை அவர் பயன்படுத்தினார் என்று நான் நினைக்கிறேன். அவர் இந்தவிதமான ஒரு குறிப்பிட்ட விதமான உலோகத்தை பயன்படுத்தினார். அது வேலை செய்யவில்லை. அங்கே இரவு நேரங்களில், ஒரு கோப்பை காபியுடனும், ஒரு சான்ட்விட்சுடனும், தன்னால் முடிந்த அளவுக்கு மிகவும் அயராது உழைத்தார், ஆனால் இன்னும் அவருடைய இருதயத்தில் ஏதோவொன்று அந்த கம்பியை மின்சாரத்தால் சூடுபடுத்தினால் அது வெளிச்சத்தை கொடுக்கும் என்று அவரிடம் கூறியது. சரி இப்பொழுது, அந்த முதல் கம்பியிலே அவர் என்னால் முடியவில்லை என்று விட்டுவிடவில்லை. அவர் அதை அப்படியே ஓரமாக போட்டுவிட்டு இன்னொன்றை எடுத்து முயற்சித்தார். 15. ஆனால் நாம், நாம் அல்ல... தேவனுடைய ஆவிக்குரிய பரிமாணத்தோடு தொடர்பில் இருக்கிற நாமோ, நாம் ... “நல்லது, எனக்காக ஜெபிக்கப்பட்டது, எனக்கு சுகமாக வில்லை, எனவே அதில் ஒன்றுமே இல்லை என்று நான் சிந்திக்கிறேன்.” ஓ, தேவனுக்கு நீ என்னே ஒரு மோசமான பெலவீனமான தளர்ந்து போனவனாயிருக்கிறாய். பாருங்கள்? கவனியுங்கள். இல்லை, ஐயா. விடாமுயற்சி செய்யும் யாரோ ஒருவரே தேவனுக்கு தேவை. ஜெயிப்பவன் தன்னால் முடியாது என்று ஒருபோதும் விட்டுவிடவேமாட்டான், தன்னால் முடியாது என்று விட்டுவிடுகிறவன் ஒருபோதும் ஜெயிக்கவேமாட்டான். நீங்கள் தரித்திருந்து அதை அறிக்கை செய்யவேண்டும், சாத்தானுக்கு முன்பாக காரியங்களை அறிக்கை செய்ய வேண்டும். அவனிடம், “அது இப்படியாக இருக்கிறது. கர்த்தர் உரைக்கிறதாவது. தேவன் அவ்விதம்தான் கூறியி ருக்கிறார், அது எழுதப்பட்டிருக்கிறது. அது எழுதியிருக் கிறதே.” என்று கூறுங்கள். அவன் என்ன கூறினாலும் பொருட்டல்ல, “அது எழுதியிருக்கிறதே” சரியாக அங்கே. “நல்லது, சகோதரன் பிரன்ஹாம் என்னை தொட்டதே இல்லை.’ “அது எழுதியிருக்கிறதே." சகோதரன் பிரன்ஹாம் எந்தவொரு சுகமளித்தலையும் செய்யவே இல்லை. தேவனே உங்களை சுகப்படுத்தினார். அது ஏற்கனவே செய்தாயிற்று. ‘அது எழுதியிருக்கிறதே. தேவனை விசுவாசித்து நான் எதை கேட்டாலும், நான் அதை பெற்றுக்கொள்வேன். அது என்னுடையது, என்னுடைய தனிப்பட்ட சொத்தாயிருக்கிறது.' 16. பின்பு எடிசன், மணிகணக்காக, அவருடைய இருதயத் தில் ஏதோவொன்று. அதற்கு முன்பாக அதாவது - ஒரு விளக்கை எரியச்செய்யும் மின்சாரம் அவர்களுக்கு இல்லா திருந்தது, ஆனால் அதை கொண்டு அப்படி செய்ய முடியும் என்று எடிசன் விசுவாசித்தார். இறுதியில் அவர் அதை ஜெயித்தார், ஏனெனில் அவருடைய இருதயத்தில் ஏதோவொன்று அதினால் அப்படி செய்ய முடியும் என்று கூறியது. அதினால் அதை செய்ய முடியும் என்று ஏதோவொன்று இங்கே கூறிக்கொண்டிருக்கும் வரை, அதற்கு பதில் சொல்லும்படியாக ஏதோவொன்று அங்கே இருக்க வேண்டும். அது சரி. உன்னுடைய கொள்ளுதாத்தா பக்கத்து வீட்டுகாரரிடம் ஒரு தொலைக்காட்சி பெட்டியை பற்றி, ஒரு அலை, காற்றின் மூலமாக அப்படியே அலைவரிசையாக வந்து, ஒரு படத்தையே உருவாக்க முடியும் என்பதை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது அவர் என்ன சொல்லியிருந் திருப்பார். ஏன், “அவன் பைத்தியக்காரன்” என்று கூறி இருந்திருப்பார். ஆனால் யாரோ ஒருவர் காற்றலை(airwave) இருக்கிறது என்பதை விசுவாசித்தார். ஆனால் அவரால் அதை விளக்க முடியவில்லை. தேவன் அதை இங்கே வைத்திருந்தார். இப்பொழுது, ஒரு காற்றலை இருக்கிறது என்பதை அவர் எவ்வாறு யோசித்தார். நமக்கு அது கிடைத்துவிட்டது: நம்மிடம் தொலைக்காட்சி இருக்கிறது, இல்லையா? நிச்சயமாக நம்மிடம் இருக்கிறது. வானொ லியும் அதுபோன்றவைகளும். அது எப்படி நடந்தது? ஏனெனில் மனித இருதயத்திற்குள்ளாக ஏதோவொன்று "அது அங்கே இருக்கிறது” என்று கூறியது. அது அந்த பரிமாணத்திற்குள் உடைத்து சென்று, அதை பற்றி பிடித்து, ங்கே கொண்டு வந்து, இந்த உலகிற்கு அளித்தது. 17. இப்பொழுது, சகோதரனே, சகோதரியே, நீங்கள் விரும்பினால் மூடபக்திவைராக்கியம் கொண்டவன் என்று அழைக்கலாம், ஆனால் அங்கே தேவனுடைய வல்லமை இருக்கிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன். முதல் காரணம், ஏனெனில் தேவன் அப்படிதான் கூறியிருக்கிறார். இரண்டாவது காரணம், ஏனெனில் என்னுடைய இருத யத்தில் அங்கே இருக்கும் ஏதோவொன்று ஒவ்வொரு வியாதியையும் சுகப்படுத்தும் தேவனுடைய வல்லமை அங்கே இருக்கிறது என்று கூறுகிறது. நான் அதை விசுவாசிக்கிறேன். நான் அதை விசுவாசிக்கும் வரை, என் ஜீவியத்தை நான் செலவழிப்பேன்(பாருங்கள்?), அதாவது அதுதான் சத்தியம் என்பதை நான் அறிந்திருக்கிறேன். முதலாவது அது தேவனுடைய வார்த்தையாயிருக்கிறது, மேலும் “அது அங்கே இருக்கிறது” என்று ஏதோவொன்று என்னுடைய இருதயத்தில் கூறிக்கொண்டிருக்கிறது. அதை சபைக்குள் கொண்டு வரும்படியான இடத்தை கண்டு பிடிக்கும் முயற்சியில், நான் ஒவ்வொரு கம்பியாக, ஒவ்வொரு இடங்களிலும் தேடிக்கொண்டிருக்கிறேன். அநேகமாக கொள்கை வெறிபிடித்தவர்கள் எழுந்து சென்றுவிடலாம், ஆனால் தேவன்... அந்த நாளை நீங்கள் காண்பீர்கள், இன்றைக்கு அவர்கள் நம்மை பார்த்து நகைக்கும் இந்த மகத்தான வல்லமையுடன், இயேசு கிறிஸ்துவினுடைய சபை தன் காலூன்றி நிற்கும். மின்சாரம் எப்படி கொண்டுவரப்பட்டதோ அப்படியே அதுவும் கொண்டு வரப்படும், 'ஏனெனில் மனித இருதயத்தினுள் ஏதோவொன்று அது அங்கே இருக்கிறது என்று கூறுகிறது. பாருங்கள்? அது அதே மாறாத தேவனுடைய தூதன். 18. இப்பொழுது பாருங்கள். தாவீது கூறினான், “ஆழத்தை ஆழம் கூப்பிடும்போது... "(சங்கீதம்-42:07) ஒரு ஆழத்தை ஒரு ஆழம் கூப்பிடுமானால், அந்த அழைப்பிற்கு பதில் சொல்லும் படியாக ஒரு ஆழமானது இருக்கவேண்டும். இதோ, நான் அடிக்கடி பயன்படுத்தும் விளக்க உதாரணம், ஒரு மீனிற்கு பின்பக்கத்தில் வால் வருவதற்கு முன்பாக, முதலாவது அது நீந்துவதற்கு தண்ணீர் இருந்தி ருக்க வேண்டும் இல்லையேல் அதற்கு வாலே இருந்தி ருக்காது. அது சரியல்லவா? ஒரு மரம் வருவதற்கு முன்பாக, பூமியில் ஒரு செடி பூ பூப்பதற்கு முன்பாக, முதலாவது பூமியானது இருந்திருக்க வேண்டும் எதற்கென்றால் - அந்த பூ வைக்கப்படுவதற்காக, இல்லையேல் பூவே அங்கு இருந்திருக்காது. அது சரியல்லவா? இப்பொழுது, இங்கே - சில நாட்களுக்கு முன்பு, நான் வாசித்தேன் ஒரு சிறு குழந்தைக்கு இருந்தது... மற்றொரு நாளில் சகோதரன் பாக்ஸ்டர் ஒன்றை என்னிடம் கூறிக்கொண்டிருந்தார், அதாவது ஒரு சிறு குழந்தை உப்பு, உப்பு, உப்பு என்று அடக்க முடியாத ஆசைக்கொண்டு இருந்ததாம்(craving). அந்த குழந்தை அதை சாப்பிடாதபடி, அவர்கள் உப்பை அந்த குழந்தையை விட்டு விலக்கி வைத்தார்கள். அந்த குழந்தை இறந்துவிட்டது. அவர்கள் பிரேத பரிசோதனை செய்து, அந்த குழந்தையின் உடலில் ஏதோவொன்றிற்கு உப்பு வேண்டியதாயிருந்தது என்பதை கண்டறிந்தார்கள். அவர்கள் அதை அவ்விடத்தில் வைத்த போது, அது அப்படியே உப்பை கரைத்து விட்டது. பாருங்கள்? அவர்கள் குழந்தைக்கு உப்பை தந்திருந்தால், இருந்தால்... இங்கே, பென்சில்களில் இருந்து ரப்பர்களை சாப்பிட்ட சிறு குழந்தையை பற்றி நான் வாசித்தேன். அவன் சைக்கிளில் இருக்கும் பெடலை சாப்பிட்டு விடுவான். நல்லது, அவர்கள் வியந்தார்கள்.. அவர்கள் இந்த சிறு பையனை பரிசோதித்து, அவனுடைய சிறு உடலிற்கு கந்தகம் (sulfur) தேவைப்பட்டது என்பதை கண்டு அறிந்தார்கள். ரப்பர்களில் கந்தகம் இருக்கிறது. பாருங்கள்? அங்கே கந்தகம் இருக்கிறது, இங்கே இருக்கும் ஏதோ வொன்று கந்தகத்தை கூப்பிடுகிறது, அதை எங்கோ ஓரிடத்தில் கண்டுபிடிக்கும் வரை அவன் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக கடித்துக்கொண்டே இருப்பான். இங்கே இருக்கும் ஏதோவொன்று கந்தகத்தை கூப்பிடு கிறது என்பதையே அது காட்டுகிறது. அந்த அழைப்பிற்கு பதில் சொல்லும்படியாக அங்கே கந்தகம் இருக்க வேண்டும். நான் என்ன கூறுகிறேன் என்பது உங்களுக்கு புரிகிறதா? ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது... 19. இப்பொழுது, நம்முடைய இருதயங்களில் ஏதோ வொன்று இருக்கும்வரை... இங்கே எத்தனை பேர் தெய்வீக சுகமளித்தலை விசுவாசிக்கிறீர்கள்? எல்லாம் சரி. பின்பு நிச்சயமாக... பாருங்கள்... இருங்கள்... தெய்வீக சுகமளித்தலின் மூலமாக தேவனால் சுகம் பெற வேண்டும் என்கிற ஒரு வாஞ்சையின் கூப்பிடுதல் அங்கே உள்ளே இருப்பது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாக, ஒரு ஊற்று எங்கேயோ திறந்திருக்க வேண்டும். பாருங்கள்?... ? உன்னை வாஞ்சிக்கும்படி செய்கிற அந்த சிருஷ்டி, அந்த சிருஷ்டியானது அங்கே இருப்பதற்கு முன்பாக, அந்த சிருஷ்டியை சிருஷ்டிக்கும் ஒரு சிருஷ்டிகர் இருந்தாக வேண்டும். அது சரியல்லவா? நல்லது, அப்படியானால் அதை வாஞ்சிக்கும்படியான அந்த வாஞ்சையை உன் இருதயத்திற்குள் வைக்கிற தேவன் எங்கோ இருந்தாக வேண்டும். அவர் அந்த வாஞ்சையை அங்கே வைத்தார் என்றால், பின்பு உனக்குள் இருக்கும் அந்த வாஞ்சையை திருப்தியாக்குகிற ஏதோவொன்றும் அங்கே இருந்தாக வேண்டும். உங்களுக்கு புரிகிறதா? ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது... (சங்கீதம்-42:07) இங்கு எங்கோ ஓரிடத்தில், ஏதோவொரு நாளில் நீங்கள் கண்டடைவீர்கள், நாம் அனைவரும் அதை காண போகிறோம், அதாவது அக்கறைக்கு (yonder) உடைத்துக்கொண்டு செல்லும் ஒரு சபையை தேவன் கொண்டிருக்க போகிறார், சகோதரனே, முன்னொரு காலத்தில் ஜீவிக்கிற தேவனுடைய சபைக்கு சொந்தமாயிருந்து ஓரமாக தூக்கியெரியப்பட்ட அந்த எல்லா அற்புதமான காரியங்களும், என்றோ ஓர் நாளில் அது காலூன்றி நின்று, ஆகாயத்தினூடாக மேலே தன்னுடைய பயணத்தை செய்யப்போகிறது. ஓ, என் சகோதரனே, சகோதரியே அதை வருடங்களாக நான் பார்த்து வருகிறேன். இன்றிரவு, இஸ்ரவேல் புத்திரர்களை வழிநடத்திய அந்த அதே பரிசுத்த ஆவியானவர்தான் நம்மையும் எங்கோ ஓரிடத்திற்கு, தூரத்திலிருக்கும் அந்த தண்ணீர்களண்டை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஜனங் களால் அதை புரிந்துக்கொள்ள முடியவில்லை, ஆனால் அது அங்கே இருக்கிறது. மனித இருதயம் அதை கூப்பிடும் வரை, அதற்கு பதில் கூறும்படியாக ஏதோவொன்று அங்கே இருந்தாக வேண்டும். ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது. "உன்னை வழியில் வழிநடத்தும்படி நான் என் தூதனை உனக்கு முன்பாக அனுப்புவேன்.” (யாத்திராகமம்-23:20) 20. அதை குறித்த பிரச்சனை என்னவென்றால், நாம் தூதனுக்கு முன்பாக செல்ல முயற்சித்து விடுகிறோம். அந்த தூதன் வழியில் வழி நடத்தட்டும், அவர் நம்மை ஜீவ தண்ணீரின் ஊற்றுகளண்டைக்கு வழி நடத்தி, அதை நமக்கு இலவசமாக தருவார். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நம்முடைய தலைகளை நாம் தாழ்த்தலாமா. கர்த்தராகிய இயேசுவே, இன்றிரவு, இந்த சிறு சபைக்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இதின் பாஸ்டருக்காகவும், இதின் போதகர்களுக்காகவும் (teachers), மேலும் இதில் கற்றுக்கொள்ளும் ஜனங்களுக்காகவும்(pupils) நாங்கள் உமக்கு நன்றிகளை தெரிவிக்கிறோம். ஒவ்வொரு ஊழியருக்காகவும், மேலும் அவருடைய சபை ஜனங்களுக்காகவும், இங்கே இன்றிரவு ஒன்று கூடி இருக்கும் அவர்களுடைய பகுதியினருக்காகவும் நாங்கள் உமக்கு நன்றிகளை தெரிவிக்கிறோம். அவர்களில் சிலர் வேறு அறைகளில் இருக்கிறார்கள், அவர்களுக்காகவும் உமக்கு நாங்கள் நன்றிகளை தெரிவிக்கிறோம். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, தன்னுடைய இரக்கத்தாலும், தன்னுடைய தகுதியாலும் எங்களை ஒன்றாக இழுத்துக் கொண்ட இயேசு கிறிஸ்துவுக்காக உமக்கு நாங்கள் நன்றிகளை தெரிவிக்கிறோம். பிதாவே, ஒரு உண்மையான உத்தமமான இருதயத்தோடு நாங்கள் உமக்கு நன்றிகளை தெரிவிக்கிறோம். இப்பொழுது, இன்றிரவு நீர் எங்களோடு இருக்கும் படியாக நான் ஜெபிக்கிறேன். எங்களுக்கு உதவி செய்யும் எங்களை ஆசீர்வதியும். என்னுடைய இருதயமும், இங்கேயுள்ள மற்றவர்களுடைய இருதயங்களும் ஒன்றாக கலந்து, ஆழத்தை நோக்கி கூப்பிடுகையில், அந்த ஆழம்... சத்துருவால் பாதிக்கப்பட்ட உம்முடைய பிள்ளைகளாகிய புருஷரும் ஸ்திரீகளும் இங்கே உட்கார்ந்திருக்கையில்... எங்களுடைய சகோதரன் பாக்ஸ்டர், அந்த - உம்முடைய போதகரை, சிறிது நேரத்திற்கு முன்பாக, அங்கே படியிலே நின்று, அவர் பேசுவதை, பொல்லாத ஆவிகளை துரத்து வதை குறித்து பேசுவதை நான் கேட்டுக்கொண்டிருந்தேன். கர்த்தாவே, உமக்கு நாங்கள் எவ்வளவாய் நன்றிகளை தெரிவிக்கிறோம், அதாவது உம்முடைய வார்த்தை அதை போதிக்கிறது, “என் நாமத்தினாலே பிசாசுகளை துரத்துவார் கள்... வியாதியஸ்தர்மேல் தங்கள் கைகளை வைப்பார்கள் அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள். ” தேவனே, அதை நீர் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறீர். (மாற்-16:17,18) இப்பொழுது, பிதாவே, இன்றிரவு நீர்தாமே அந்த திரையை விலக்க வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கி றோம். கர்த்தாவே, தூரத்திலிருக்கும், வட்டங்களையும் (circles), பரிமாணங்களையும்(dimensions) எங்களுக்கு திறந்து தாரும், அதாவது அந்த மகத்தான பரிசுத்த ஆவியானவர் தாமே இன்றிரவு ஒவ்வொரு இருதயத்தையும் விசுவாசத் தினால் நிரப்புவாராக மேலும் இன்றிரவு நாங்கள் இந்த கட்டிடத்தை விட்டு வெளியே செல்லும்போது, எங்கள் மத்தியில் ஒருவரும் பெலவீனமாக இல்லாமல் இருப்பார் களாக. நாங்கள் களிகூர்ந்தபடியே, சந்தோஷமாக, சுகமாக்க ப்பட்டவர்களாக, ஆவியானவரால் நிரம்பினவர்களாக வெளியே செல்வோமாக, மேலும் கர்த்தாவே, நகரம் முழுவதும் பரவிசெல்லும், ஒரு பழைய பாணியிலான எழுப்புதலானது இந்த நகரத்தில் ஆரம்பிக்கட்டும். பிதாவே, இதை அருளும், அநேகர் இரட்சிக்கப்படுவார்களாக. நாங்கள் இதை கிறிஸ்துவின் நாமத்தினால் கேட்கிறோம். ஆமென். 21. [சகோதரன் பிரன்ஹாம் யாரிடமோ பேசுகிறார் - ஆசி]... ?... இவைகளோடு முன்னேறி செல்லுங்கள்... ? ... எல்லாம் சரி. நண்பரே, வியாதியஸ்தர்களுக்காக எப்படி ஜெபிப்பது என்பதை தீர்மானம் செய்வது நமக்கு ஒருவிதத்தில் கடினமான காரியமாயிருக்கிறது, என்பது உங்களுக்கு புரிகிறதா. சகோதரன் பாக்ஸ்டர் அவர்களே, ஒரு ஒழுங் கான வரிசையாய் இருக்கும்படி நாம் எப்படி அவர்களுக்கு அட்டைகளை கொடுக்க வேண்டும் என்பதை நீங்கள் அவர்களுக்கு விளக்கி இருப்பீர்கள் என்று நான் நினைக்கிறேன். “சரி இப்பொழுது, இவர்களில் இத்தனை பேர் இங்கே வாருங்கள், அல்லது அங்கே சென்று அவர்களில் இத்தனை பேரை அழைத்து வாருங்கள்” என்று நாங்கள் கூற முயற்சித்தால். நீங்கள் “உy-ஹுஹ், அது நிரூபிக்கிறது. நீங்கள் பாகுபாடு பார்க்கிறீர்கள்...” என்று கூறி விடுவீர்கள். எனவே நாங்கள் ஒவ்வொருவருக்கும் அட்டைகளை கொடுத்து, அவைகளில் ஒவ்வொன்றாக ஏதோவொரு இடத்தில் இருந்து ஆரம்பித்து, அவர்களை அழைக்கிறோம். இப்பொழுது, நீங்கள் அவர்களுக்கு 50-முதல் 100-வரை கொடுத்தேன் என்று நீங்கள் கூறினீர்கள் என்று நான் நம்புகிறேன், எதில் கொடுத்தீர்கள்? “H”-ல் 1- முதல் 100- வரை. நல்லது, நாம் ஆரம்பிக்கலாம், 50, 60... எடுங்கள். இங்கே எத்தனை பேரை நம்மால் வரிசைப்படுத்த முடியும், சுமார் 10-பேரையா? ஐயா? எல்லாம் சரி. அப்படியானால் 15-ஐ முயற்சிக்கலாம். எல்லாம் சரி, நாம் H-10,11,12,13,14-ஐ எடுக்கலாம், மேலே தொடர்ந்து, 50,55,60,65, சரியாக முதல் பதினைந்து. மேலும் நாம் H-50-ல் இருந்து ஆரம்பிக்கலாம். யாரிடம் H-50 இருக்கிறது, H-50 ஜெப அட்டை? 51,52,53,54, அது சரி, இங்கே வரிசை படுத்துங்கள். நீங்கள் விரும் பினால் இந்த பக்கமாக வந்து வரிசையில் நில்லுங்கள். அநேகமாக நம்மால் அவர்கள் அனைவரையும் அழைக்க முடியாது. நம்மால் முடிந்த அளவுக்கு சிறந்ததை செய்வோம். 22. இப்பொழுது, உங்களில் தனிப்பட்ட ஒவ்வொருவரும் ஆழமாகவும் உத்தமமாகவும் ஜெபத்தில் இருக்க வேண்டு மென்று நான் விரும்புகிறேன். நீங்கள் அதை செய்வீர்களா? எல்லாம் சரி, அவர்கள் வந்துகொண்டிருக்கும்போது, எனக்கு முன்பாக இங்கே ஒரு ஒரு இளைஞன் உட்கார்ந்து இருப்பதை நான் பார்க்கிறேன். அவன் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளான்; அந்த மனிதனை தேவன் சுகமாக்கு வார் என்று அல்லது நமக்கு ஏதோ ஒன்றை, சில வெளிப்பாட்டை தருவாரென்று நான் விரும்புகிறேன். நான் இங்கே இருக்கையில் நான் காண விரும்புகிறேன்... அதைக்காட்டிலும் மிக மோசமானதை நான் கண்டிருக்கி றேன், நம்முடைய கர்த்தர் சரி செய்தார். இப்பொழுது, அநேகமாக அந்த பையனுக்கு பல முறை ஜெபிக்கப்பட்டிருக்கலாம். எனக்கு அது தெரியாது. ஆனால் அவனிடம் கூறும்படியாக தேவன் உரைத்து என்னிடம் ஏதோவொன்றை கூறினால், அவர் அதை செய்யும்படி நீங்கள் ஜெபிப்பீர்களா, நீங்கள் ஜெபிப்பீர்களா? அவர் அதை செய்வார் என்று நான் - நான் விசுவாசிக்கிறேன். அந்த பையனை கடந்த இரவு பார்த்தேன், என் இருதயம் அவனுக் காக துடித்தது, நான்... இப்பொழுது, ஒருவேளை அவர் அதை - அதின் நோக்கம் என்ன, காரணம் என்ன, அதை விளைவித்தது எதுவென்று, அது என்ன செய்யுமென்று என்னிடம் கூறலாம். எனக்கு தெரியாது. பாருங்கள்? அது தேவனை பொறுத்ததாயிருக்கிறது. அவர் அதை எப்படி செய்யவேண்டுமென்று கூறுகிறாரோ அப்படியே நான் நான் அதை செய்யவேண்டும். அவன் சுகமாகிவிட்டான் என்று ஒருவேளை அவர் அவனிடம் கூறக்கூடும். அவர் அதை கூறினால், அது-அது அதைப்பற்றின எல்லா கேள்விகளையும் தீர்த்துவைத்துவிடும். அவன் சுகமாகவே மாட்டான் என்று அவர் என்னிடம் கூறினால், அது - அது ஒருபோதுமே குணமாகாது. அவர் என்ன கூறினாரோ அது அப்படியேதான் நடக்கும். பாருங்கள்? என்னால் முடியாது... ஆனால் எனக்கு தெரியாது, நான் அந்த பையனை மட்டும் கவனித்துக்கொண்டிருக்கிறேன், நான் ஒவ்வொருவரிடமும் செய்வதுபோன்று, என் கண்ணை அவன் மீது வைத்திருக்கிறேன். 23. இப்பொழுது, கர்த்தருடைய தூதனானவர்... அதின் புகைப்படத்தை எத்தனை பேர் எப்போதாவது பார்த்து இருக்கிறீர்கள்? உங்களுடைய கரங்களை நாங்கள் பார்க்கட்டும். அதில்... அந்த புகைப்படத்தை அந்த ஒளிவட்டம்(halo) போன்று அங்கே எடுக்கப்பட்டதை? உங்களில் பலர் பார்த்திருக்கிறீர்கள். அவைகளில் சில இங்கே நம்மிடம் இருக்கின்றன என்று நான் நம்புகிறேன். நாம்... எல்லாம் சரி, 50-முதல் 65-வரை. நண்பரே, உங்களுடைய ஜெப அட்டையை திருப்புங்கள். அதில் பின்பக்கத்தை பாருங்கள். நீங்கள் அதில் கண்டறியலாம் ஒரு... ? ... 50-முதல் 65-வரை. நீங்கள் விரும்பினால், அங்கே சுமார், அது இல்லை - அவர்கள் அனைவரும் வரிசையில் இல்லை. 50-முதல் 65-வரை இருப்பவர்கள், நீங்கள் இங்கே வரிசையில் நின்றால் எங்களால் முடிந்த சிறந்ததை நாங்கள் செய்ய முயற்சிப்போம். 50-முதல் 65-வரை, அது H-தானே? அது H-50-தானே? எல்லாம் சரி. எல்லாம் சரி. இப்பொழுது, உங்களில் மற்றவர்கள், உங்களுடைய அட்டைகளை வைத்துக்கொள்ளுங்கள், ஒருவேளை இங்கே இருக்கிற எண்களை நாம் முடித்துவிட்டால், அநேகமாக நாம் இன்னொரு எண்ணை அழைக்கலாம், அதிலிருந்து இன்னும் அதிகமானதை அப்படியாக அழைக் கலாம். சுற்றிலும், நாம் ஜெபிக்கையில் ஒவ்வொருவரும் எப்போதுமே அந்த இடத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள நாங்கள் முயற்சிக்கிறோம், எனவே ஒவ்வொரு வருக்காகவும் ஜெபிக்கப்படும். இப்பொழுது, ஆனால் நாங்கள்... உங்களுடைய அட்டையை பாருங்கள்; சகோதரன் பாக்ஸ்டர் அவர்களே, இப்பொழுது நீங்கள் அவர்களை எண்ணுங்கள், நீங்கள் பார்த்தால்... யாரேனும் ஒரு - யாரேனும் அநேகமாக காது கேட்காமலோ ஏதோ ஒன்றாகவோ இருந்து, நல்லது, வர முடியாமல் இருந்தால், சுற்றிலும் உட்கார்ந்து இருக்கும் மற்றவர்களுடைய அட்டையை பாருங்கள்... அது ஏறக்குறைய - அது உங்கள் பக்கத்திலோ அல்லது எங்கேயோ உட்கார்ந்து இருக்கலாம்... இப்பொழுது, ஜனங்கள் இங்கே மேலே வருவது உறுதியில்ல... (சரியா...) 24. எல்லாம் சரி, இங்கே மேலே வரக்கூடிய ஜனங்கள், இந்த ஜனங்கள் சுகமாகப்போகிறார்கள் என்பதற்கு எந்த நிச்சயமுமே இல்லையென்றால், எந்தவொரு நிச்சயமுமே இல்லையென்றால். அவர்கள் இங்கே சும்மா நின்றிருக்கி றார்கள். ஆனால் ஒரே ஒரு நிச்சயம்தான் இருக்கிறது, அது எதுவென்றால் தேவனில் உங்களுக்கு எவ்வளவு விசுவாசம் இருக்கிறது என்பது மட்டுமே. அதை செய்வது உங்களுடைய விசுவாசமே. இப்பொழுது, இன்றிரவு இந்த இருக்கையின் வரிசை ஓரத்தில் இருக்கிற - இருக்கிற உங்களில் ஒவ்வொருவரும் உட்கார்ந்து, அமைதியாக இருந்து ஜெபிக்கவேண்டு மென்று நான் விரும்புகிறேன். நீங்கள் ஆழமான உத்தமத்தோடு ஜெபிக்கவேண்டுமென்று நான் விரும்பு கிறேன். நீங்கள் எங்கே உட்கார்ந்து இருந்தாலும் அல்லது நின்றிருந்தாலும் அல்லது பின்னாடி இருந்தாலும், நீங்கள் எங்கே இருந்தாலும் தேவன் வெளிப்படுத்தி உங்களை சுகமாக்குவார் என்று விசுவாசித்து நீங்கள் ஜெபிக் கவேண்டுமென்று நான் விரும்புகிறேன். வெறுமனே விசுவாசியுங்கள்; நீங்கள் செய்யவேண்டுமென்று நான் கேட்பது அது மட்டுமே. தேவனில் விசுவாசமாய் மாத்திரம் இருங்கள். 25. இப்பொழுது, நான் - நான் உங்களுடைய சகோதரன், நான் இங்கே ஒரே ஒரு நோக்கத்திற்காகதான் இருக்கிறேன், அது உங்களுக்கு உதவி செய்யத்தான். என்னால் உங்களுக்கு ஒரே ஒரு வழியில்தான் உதவி செய்ய முடியும், அது இயேசு கிறிஸ்து உங்களுக்காக ஏற்கனவே என்ன செய்தார் என்பதை உங்களை பார்க்க வைப்பதேயாகும். இப்பொழுது, நாம் ஜெபிக்க ஆரம்பிக்கும் முன்னர், இங்கே பின்னாடியும், மற்ற எல்லாவிடங்களில் இருக்கும் ஜனக்கூட்டத்திடமும் நான் இதை கூறட்டும். என் சகோதரர்களே, சகோதரிகளே, இங்கே வியாதியாயிருக்கும் ஒவ்வொரு நபரையும் இயேசு கிறிஸ்து ஏற்கனவே சுகப் படுத்தி விட்டார். இன்றிரவு இங்கே வியாதியாக இருக்கும் ஒவ்வொரு நபரும், நீங்கள் ஏற்கனவே சுகமாகிவிட்டீர்கள், இந்த கட்டிடத்தில் இருக்கும் ஒவ்வொரு பாவியும் நீங்கள் இங்கே இருந்தால், உங்களுடைய பாவம் உங்களுக்கு ஏற்கனவே மன்னிக்கப் பட்டுவிட்டது. நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் என்னவென்றால், ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வது மட்டுமே. பின்பு அதை நீங்கள் ஏற்றுக் கொள்ளும்போது, நீங்கள் அவரை உங்களுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்கிறீர்கள், ஆனால் உங்களுக்காக அவர் புதிதாக மரிக்கும்படி கீழே வருவதில்லை, அவர் சற்றே... அவர் என்ன செய்தாரோ அதை மாத்திரம் நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள், அதின் மூலமாகவே நீங்கள் இரட்சிக்கப்படுகிறீர்கள். அது சரியல்லவா? சுகமளித்தலின் மூலமாகவும் அதே காரியம்தான். சகோதரன் பாக்ஸ்டர், அது சரியானது என்று நான் விசுவாசிக்கிறேன். மேலும் - மேலும் சகோதரர்களே அதுதான் சத்தியம், இல்லையா? ஆம். அந்த கிரியை, ஏற்கனவே. இயேசு கிறிஸ்து, அவர் மரித்தபோது அந்த கிரியையை செய்து முடித்து, முழு மீட்பிற்கான விலைக்கிரயத்தையும் கல்வாரி யில் செலுத்தி விட்டார். இப்பொழுது, நாம் அதை அங்கே நோக்கிப் பார்த்து, அதை விசுவாசிக்க வேண்டும். நீங்கள் எதை கேட்கிறீர்களோ, அதை பெற்றுக்கொண்டோம் என்று விசுவாசியுங்கள்; (மாற்கு-11:24) அதுவே அதை பற்றின எல்லா கேள்வியையும் தீர்த்துவைக்கிறது. இப்பொழுது, விசுவாசமாயிருங்கள். 26. ஒரே காரியம் என்னவென்றால்... இப்பொழுது, இங்கே, எனக்கு பின்னாக இந்த ஊழியக்காரர்கள் இருக்கிறார்கள், என்னுடைய சொந்த மேலாளர் (manager), சகோதரன் பாக்ஸ்டரும் இங்கே இருக்கிறார். அநேகமாக என்னால் தொடக்கூட முடியாத வார்த்தையை அவர்களால் விளக்க முடியும். அவர்கள்... தேவன் அவர்களை அதற்காக அழைத் திருக்கிறார். பாருங்கள்? அவர்கள் உங்களிடம் என்ன கூறுகிறார்களோ அதை மட்டும் நீங்கள் விசுவாசித்தால், அதை செய்வது அதுதான். அது அதையே மாறாமல் செய்யும்; அது தேவனுடைய வார்த்தையாயிருக்கிறது. இப்பொழுது, அதற்கு பிறகு தேவனுடைய அன்பானது வரங்களை சபைக்குள் அனுப்பியிருக்கிறது. இப்பொழுது, இன்றிரவு பரிசுத்த ஆவியானவர் ஒரு குறிப்பிட்ட நபரிடம் அந்நிய பாஷையின் மூலமாக பேசமுடியும், அங்கே இருக்கும் இன்னொருவர் வியாக்கியானத்தை கொடுத்து, இங்கிருக்கும் இந்த நபரிடமோ அல்லது வேறு யாரிடமோ கட்சிதமாக என்ன செய்ய வேண்டுமென்று கூறமுடியும் என்பதை நான் விசுவாசிக்கிறேன், அவர்களுடைய பிரச்சனை என்னவென்றும் அவர்கள் எங்கே... நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? நல்லது, அது சபையில் இருக்கும் தெய்வீக வரமாயிருக்கிறது. இப்பொழுது, ஆனால் அவர் அதை கூறினால், அது பரிசுத்த ஆவியாயிருந் தால், அது முற்றிலும் அவ்வாறே இருக்கும். அவர் கூறிய பிரகாரமாகவே அது துல்லியமாக இருக்கும். அது ஒரு வரம். (1 கொரிந்தியர்-12:28) 27. அப்பொழுது அவர் அனுப்பினார், முதலாவதாக அவர் தீர்க்கதரிசிகளை, போதகர்களை, சுவிசேஷகர்களை அனுப் பினார், மேலும்... அது சரியல்லவா? அந்நிய பாஷை வரங்கள், வியாக்கியானிக்கும் வரங்கள், அவை எல்லாம் சபையின் பக்திவிருத்திக்காக இருக்கிறது. அது சரி அல்லவா? எல்லாமே சபையின் பக்திவிருத்திக்காக இருக் கிறது, தேவன் அவைகளை சபையில் வைத்திருக்கிறார். யார் வைத்தது? யாரோ ஒருவர் உன் மீது கைகளை வைத்ததால் அல்ல, ஆனால் தேவன் வைத்ததால் இருக்கிறதே தவிர மனிதன் வைத்ததால் அல்ல. தேவன் சபையில் வைத்திருக்கிறார். அவர் கொடுத்தார்...(எபே-4:13) எல்லாம் சரி, அந்த சீமாட்டியை அழைத்துவாருங்கள். இப்பொழுது, வருகின்ற இந்த ஜனங்கள் முற்றிலும் அன்னியராயிருக்கிறார்கள். இப்பொழுது, நீங்கள் எனக்கு, இன்றிரவு ஒவ்வொருவரும் இதை எனக்காக செய்ய வேண்டுமென்று விரும்புகிறேன், ‘ஏனெனில் எனக்கு இருக்கிறது... பாருங்கள், ஆப்பிரிக்காவிற்கு செல்லும் அழைப்பிற்காக நான் காத்திருக்கிறேன், அது எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வரலாம். எத்தனை இரவுகள் என்னால் எங்களால் ஏதேனும் ஓரிடத்தில் தங்க முடியு மென்று எனக்கு தெரியவில்லை, ‘ஏனெனில் அது-அவர் அநேகமாக... என் ஜீவியம் அவருக்காக கொடுக்கப்பட்டு இருக்கிறது. இப்போதிலிருந்து இன்னும் பத்து நிமிடங் களில் அவர் என்னை அழைத்து, ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பகூடும்; அது எங்கேயிருந்தாலும், நான் கிளம்பி விடுவேன் (பாருங்கள்?). 28. நாம் இங்கே இருக்கையில், தேவன் உங்கள் மூலமாக நகரும்படிக்கும், உங்களுக்கான தேவனுடைய ஆசீர்வாதத் தின் பலனை நீங்கள் பெறும்படிக்கும், உங்களிடம் இருக்கும் எல்லா மூட நம்பிக்கைகளையும் எடுத்துப் போட்டு விட்டு, ஒவ்வொன்றையும் அமைதியாக்கி, உங்களை நீங்களே பரிசுத்த ஆவியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டுமென்று நான் விரும்புகிறேன். அதற்காகத்தான் நான் உங்களிடம் வந்திருக்கிறேன். நான் இப்படியாக இறங்கி வந்து கூறுகிறேன், “இப்பொழுது, தேவனே, நீர் எனக்கு உதவி செய்யும். ஜனங்கள் முழுவதுமாக விசுவாசிக்கட்டும், எனவே அவர்களுக்கு என்னால் ஊழியம் செய்ய முடியும். நான் இந்த நகரத்தை விட்டு செல்லும்போது, தேவனுடைய மகிமை ஒவ்வொரு இடங்களிலும் இருக்கும், ஜனங்கள் நம்முடைய அன்பான கர்த்தராகிய இயேசுவை ஸ்தோத்தரிப்பார்கள், அவரில் நாம் நம்முடைய முழு இருதயத்தோடும் அன்புகூர்ந்து, அவருடைய திராட்ச தோட்டத்திற்காக வேலை செய்கிறோம். இப்போது, தெய்வீக ஆவியில் தேவனுடைய பராமரிக்கும் அக்கரையில் (providence) - காணக்கூடிய வரமும், முன்னறிவதும் (foreknowing), என்ன நடந்தது என்பதை அறிவதும், என்ன நடக்க போகிறது என்பதை அறிவதும் இருக்கின்றன. அதற்கும் சுகமளித்தலுக்கும் சம் பந்தமே இல்லை; அது இயேசு கிறிஸ்துவை அவருடைய வார்த்தையை மீண்டும் கொண்டு வருவதற்காக உயர்த்தி (edify), “நான் செய்த கிரியைகளை, நீங்களும் செய்வீர்கள்” (யோவான்-14:12) என்று சொல்ல வைப்பதற்காக மட்டுமே, (பாருங்கள்?) பிதா எதை காண்பிக்கிறாரோ. 29. இப்பொழுது, நான் விசுவாசிக்கிறேன் இங்கே நின்றிருக்கும் இந்த சீமாட்டி... நான் - நான் உங்களை அறியேன், சீமாட்டியே, நான் அறிவேனா? எனக்கு தெரிந்த வரையில் நான் பார்த்ததே இல்லை. நாம் முற்றிலும் அன்னியர்களாயிருக்கிறோம், என் ஜீவியத்தில் நான் உங்களை பார்த்ததே இல்லை. அப்படியானால், நல்லது, நான் உங்களை அறியவில்லையென்றால், அநேகமாக இங்கிருந்து நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் நீங்கள் வளர்ந்தவராக இருக்கலாம், அநேகமாக, பின்பு அது... பின்பு நாம் இங்கே உங்களுடன் பேசும்படியாக வரும்போது, ஏன், நான் இந்தியானாவில் வளர்க்கப் பட்டேன், அநேகமாக நீங்கள் புளோரிடாவில் வளர்க்கப் பட்டிருக்க கூடும். நல்லது, பின்பு நாம் ஒருவருடன் ஒருவர் பேச ஒன்று கூடி வந்திருக்கும்போது, நாம் பல மைல்கள் தூர இடைவேளையில் இருந்தோம், ஆனால் நீங்கள் பிறப்பதற்கு முன்னரே தேவன் உங்களை அறிவார். நான் பிறப்பதற்கு முன்னரே அவர் என்னை அறிந்திருக்கிறார். இப்பொழுது, நீங்கள் ஒரு கிறிஸ்தவள் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் - நான்... ஏனெனில் உங்களுடைய ஆவி வரவேற்பதை போன்றிருக்கிறது (உங்களுக்கு புரிகிறதா?) அது சற்றே... ஒரு ஒரு கிறிஸ்தவர் வரும் போது, அங்கே ஏதோவொன்று அப்படியே வாருங்கள் என்று அழைக்கும், உங்களுக்கு புரிகிறதா? எனக்கு எனக்கு அது இப்போது கிடைத்திருக்கிறது. அது பரிசுத்த ஆவியாயிருக்கிறது. ஆனால் இப்போது, உங்களை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாதிருந்தும், நம்முடைய ஜீவியம் முழுவதிலும் நாம் பல மைல்கள் தூரத்தில் இருந்தும், அவருடைய ஜீவனின் பிரசன்னம் இங்கே இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துக்கொள்ளும்படியாக பரிசுத்த ஆவியானவர் ஏதோவொன்றை செய்ய வேண்டும் -செய்வார், அப்பொழுது நான் உங்களுக்கு சத்தியத்தை தான் கூறினேன் என்று இன்னும் அதிகமான நம்பிக்கையை அது தரும். 30. நீங்கள் அருகில் வரவேண்டுமென்று நான் விரும்புகிறேன்... நான் சற்றே... ' ஏனெனில் இப்போது நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்; நான் உங்களுடைய ஆவியை தொடர்பு கொள்கிறேன். பாருங்கள்? ஆனால் நான் - நான்... உங்களுடன் பேசும் போது, தேவன் சகலத்தையும் அறிவார் என்பதை, நீங்கள் இதை விசுவாசிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன் (பாருங்கள்?), மேலும் அது என்ன செய்ய முயற்சிக்கிறது என்றால், அவரை உங்களுடைய சுகமளிப்பவராக நீங்கள் பெற்றுக் கொள்ளும்படிக்கான நிலைக்கு உங்களை கொண்டு வர முயற்சிக்கிறது (பாருங்கள், பாருங்கள்?), உங்களுக்குள் இருக்கும் அந்த அந்த விசுவாசத்தை ஏதோவொன்று தூண்டி மட்டும் விடுகிறது. ஏனெனில் ‘ஒரு கிறிஸ்தவராயிருப்பதால், அது அங்கேதான் இருக்கிறது, ஆனால் அது செயலிழந்த நிலையில் படுத்து கிடக்க கூடும் (laying dormant). பாருங்கள்? இப்பொழுது, ஒரு சில நிமிடங்களுக்கு உங்களுடன் பேசும்படி தயவாய்... முதல் நோயாளியாய் இருப்பது, அது எப்போதுமே அவருடைய பிரசன்னம் இங்கே இருக்கிறது என்பதை நான் அறிந்துகொள்ளும் வரை, முதலில் அந்த நோயாளிக்காக நான் நேரம் எடுத்துக்கொள்ள விரும்புகிறேன், பின்பு நான் ஜனங்களுக்காக ஜெபிக்க ஆரம்பிக்கிறேன், ஏனெனில் அவர்கள்- அவர்கள் பாதியாக விசுவாசித்தால், அவர் களுக்கு ஒரு ஆசீர்வாதம் கிடைக்கும் (நீங்கள் பாருங்கள்?), அவர்கள் அதை விசுவாசித்தால் மட்டும் போதும். ஆனால் இன்றிரவு சகோதரன் பாக்ஸ்டர் கூறிக் கொண்டிருந்த அந்த கர்த்தருடைய தூதனானவர், இப்பொழுது அவருடைய பிரசன்னத்தில், அவர் இங்கே அருகில் நின்றிருந்தால், பின்பு அவருக்கு அவர் உங்களையும் அறிவார், என்னையும் அறிவார். பின்பு உங்களில் ஏதேனும் தவறு இருந்தால், ஏதோ வியாதியோ, பின்பு அது முற்றிலுமாக... பிற்பகல் செய்தியையும் மற்றவைகளும் நீங்கள் கேட்டீர்கள். அது ஒரு பிசாசாயிருக்கிறது. எல்லா வியாதிகளுமே பிசாசினுடையதாய் இருக்கிறது. அதற்கு காரணம் தேவன் தான் என்று உங்களால் அவர் மீது பழி சொல்ல முடியாது. பாருங்கள்? அது பிசாசினுடையதாய் இருக்கிறது. 31. நல்லது, பின்பு அது ஒரு ஆவியாயிருந்தால்... இப்பொழுது, இங்கே இருக்கும் நாம் இருவரும் ஆவிகளாயிருக்கிறோம், நாம் இயற்கையானவர்களாய் இருப்பது போலவே, நாம் இயற்கைக்கு மேம்பட்ட வர்களாகவும் இருக்கிறோம். பின்பு நீங்கள் ஒரு கிறிஸ்தவ பெண்ணாகவும், நான் ஒரு Aறிஸ்தவ மனிதனாகவும் இருந்தால், அப்பொழுது உங்களுக்குள் ஏதோவொன்று, ஒரு - ஒரு வியாதியின் ஆவி இருக்கிறது, பின்பு தேவன் என்னை உங்களுடைய சகோதரனாக அனுப்பியிருக்கிறார். பாருங்கள்? நான் உங்களுடன் பேசி, அவர் என்னிடம் சென்று ஜனங்களுக்காக ஜெபி என்று கூறியதை நான் கூறுகிறேன்; இப்போது, அதுதான் எல்லாம். “ஜனங்களை உன்னை விசுவாசிக்கும்படி செய்து, நீ ஜெபிக்கும்போது உத்தமமாயிருந்தால், ஜெபத்திற்கு முன்பாக எதுவுமே நிற்காது” என்றார். இப்பொழுது, அதுதான் காரியம்; நான் ஜெபிக்கும்போது உத்தமமாக இருக்க வேண்டும், மேலும் ஜனங்களை விசுவாசிக்க வைக்க வேண்டும். நல்லது, படிப்பறிவு இல்லாததால் நான் கேள்வி கேட்டேன், எனக்கு ஆரம்ப கல்வி படிப்பு (grammer school education) இருந்தது, ஏழாம் வகுப்பு (seventh grade) வரை மட்டுமே, எப்படி என்னால் ஜனங்களை என்னை விசுவாசிக்கும்படி செய்ய முடியும்? அவர், "மோசேவுக்கு இரண்டு அடையாளங்களின் உறுதிப்பாடு (two signs of a vindication) கொடுக்கப்பட்டதை போல,” என்று கூறி, பேச ஆரம்பித்தார்... அந்த கதை எப்படி செல்கிறது என்று உங்களுக்கு தெரியும் என்று நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது, அதுதான் சத்தியம் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, உங்களுக்கு தெரிந்து எனக்கு தெரிந்திராத உங்களுடைய பிரச்சனையை அல்லது உங்களுடைய ஜீவியத்தை பற்றி வேறு ஏதாவதொன்றை, அவர் எனக்கு வெளிப்படுத் தினால், பின்பு உங்களுக்காக ஜெபிக்கும்படி தேவன் என்னை இங்கே அனுப்பியிருக்கிறார் என்பதற்கான உண்மையான அடையாளம்தான் அது என்பதை நீங்கள் விசுவாசிப்பீர்கள். அது சரியல்லவா? 32. எல்லாம் சரி, நீங்கள் பார்க்க வேண்டுமென்று - பார்க்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், என்னை பார்த்த படி விசுவாசித்துக் கொண்டே இருங்கள். கிறிஸ்தவ நண்பர்களே, அது - அது ஒரு மிக பெரிய பிரச்சனையாய் இருக்கிறது என்று நான் உங்களிடம் கூறுகிறேன். பாருங்கள், உங்களை சுற்றி ஆவிகள் இருக்கின்றன. அரங்கில் நடக்கும் என்னுடைய என்னுடைய கூட்டங்களில் (auditorium meetings) எனக்கு பின் பக்கத்தில் நான் யாரையுமே வைத்திருக்க மாட்டேன்(பாருங்கள்?), அதுபோன்று அதை சுற்றிலும் யாரும் இருக்கமாட்டார்கள், அல்லது ஆனால் இந்த பக்கத்தை தவிர வேறெங்கும் இருக்க மாட்டார்கள், எனவே நோயாளியை நேரடியாக பார்க்கும்படி என் முதுகை நான் இந்தபக்கமாக வைத்துக் கொள்வேன். ஆனால், பாருங்கள், வியாதிப்பட்ட ஜனங்கள் அங்கே பின்னாடி உட்கார்ந்து இருக்கிறார்கள். பாருங்கள், சற்றே சீக்கிரமாக நான்... இந்த பெண், அது உள்ளே வர ஆரம்பித்த உடனே, அது ஒவ்வொரு இடத்திலுமிருந்து நகர்ந்துகொண்டிருக்கிறது (நீங்கள் பாருங்கள்?), நீங்கள் கவனிக்க வேண்டும் அல்லது குழம்பி விடுவீர்கள். ஆனால் அறிந்துகொள்வதற்கென்று அது உடைந்து ஒரே தரிசனமாக மையப்பட வேண்டும். பாருங்கள், வியாதியோடு இருக்கும் ஜனங்கள் அங்கே உட்கார்ந்திருக்கிறார்கள், இங்கே வியாதியாயிருக்கிறார்கள், இங்கே, இங்கே, பின்பாக சுற்றிலும் இங்கே, மேலும் சுற்றிலும் எல்லா விடங்களிலும், எனக்கு முன்பாக நின்றிருக்கிறார்கள். ஆனால் தேவன் இரக்கமாயிருக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். 33. நீங்கள் நீங்கள்... ஆம், நீங்கள் ஒரு... அதினால் வேதனைப்படுகிறீர்கள், அங்கு ஏதோவொன்று தவறாய் இருக்கிறது. அது ஒரு - அது - அது - அது புற்றுநோயாய் இருக்கிறது. அது சரிதானே? அது சரியல்லவா? இப்போது தான் அதற்கான பரிசோதனை உங்களுக்கு செய்யப்பட்டது. அது மார்பகத்தில் தானே செய்யப்பட்டது? அது சரியல்லவா? இப்பொழுது, நான் சரியாக இருக்கிறேனா என்பதை நாம் பார்க்கலாம். அது இடது மார்பகத்தில் தானே. அது சரியல்லவா? உங்களை சுற்றி அந்த பொருளை அந்த மருத்துவர், அவர் நகர்த்திக்கொண்டிருந்த போது நான் அவரை கண்டேன், ஒருவிதத்தில் உயரமான மனிதன் கீழ் நோக்கி பார்த்துக்கொண்டிருந்தார். அது சரியா? கூறுங்கள், நீங்கள் இல்லை... நீங்கள் புளோரிடாவில் இருந்து வரவில்லை. நீங்கள் நியூ யார்க்கிலிருந்து வந்திருக்கிறீர்கள். அது சரியல்லவா? அது உண்மைதானே? எல்லாம் சரி. ஒரு ஏரியிடமோ அல்லது மற்ற வேறு ஏதோவொன்றின் பக்கத்தில், அந்த இடத்தில், நான் கண்டேன். அது உண்மைதானே? எனக்கு அந்த கிராமத்தை தெரியும். ஒரு நிமிடம் இங்கே வாருங்கள். நீங்கள் சுகமடையும்படி தேவன் என்னை அனுப்பினார் என்பது தான் சத்தியம் என்பதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? ஓ தேவனே, இரக்கமாயிரும்; இந்த மிகவும் பரிதாபமான பெண்ணின் மீது நீர் அன்பாய் இருந்து, இவளை சுகமாக்கி, இவளை நன்றாக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். இப்பொழுது, உம்முடைய ஊழியக்காரனாக, அறிந்திருக் கிறேன் அதாவது இவள், கர்த்தாவே, நீர் மாத்திரம் இவளை ஏதோவொரு வழியில் தொடவில்லையென்றால், இவளால் பூமியில் நீண்ட காலம் இருக்க முடியாது. கர்த்தாவே, எங்களுக்கு இவள் வேண்டும். எங்களுக்கு இவள் வேண்டும் இவள் இங்கே இருக்கிறாள், எங்களுடைய சகோதரியாக இருக்கிறாள், இப்போது நான் உத்தமமாக ஜெபிக்கிறேன், அதாவது இவளுடைய விசுவாசம் அதிகரித்து மேலே உயர வேண்டுமென்று, மிகவும் மேலாக, எல்லா வியாதிகளுக்கும் மேலாக, நான் அறிக்கை செய்யும் எல்லாவற்றிற்கும் மேலாக...?... தேவனுடைய மகிமை. சரியாக இவள் நன்றாகும்படி, இந்த மணி நேரம் முதல் இவள் சுகமடைய ஆரம்பிப்பாளாக. "அந்த புற்றுநோய் சபிக்கப்படட்டும்” என்று நான் கூறுகிறேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், அது வளுடைய சரீரத்தை விட்டு வெளியே போவதாக, ஒரு ஆரோக்கியமான பெண்ணாக இவள் வீட்டிற்கு சென்று, தேவனை சேவிப்பாளாக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால். ஆமென். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் சுகமடையப்போகிறீர்களா? உங்கள் முழு ஜீவனாலும் விசுவாசிக்கிறீர்களா?. ஓ, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக...?... எழும்புங்கள்..?... “என் சுகமளித்தலை நான் ஏற்றுக்கொள்கிறேன்.” 34. எல்லாம் சரி. சீமாட்டியே, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? வாருங்கள். எப்படி, அது... உங்களுடைய சிறு குழந்தை? நல்லது, அவன் ஒரு அருமையான சின்ன... அவனுடைய முகத்தில் கொப்புளங்கள் (breaking out on his face) இருக்கிறதை நான் காண்கிறேன். அஹ்-அஹ். ஓ, அது மிக மோசமாக இருக்கிறது. இப்பொழுது, இல்லை... இப்போது, அது எனக்கு கொஞ்சம் கூட தொந்தரவும் செய்யவில்லை (குழந்தை தொடர்ந்து ஜெபம் முடியும் வரை அழுதுகொண்டே இருக்கிறான் - ஆசி]. பாருங்கள், அது பரவாயில்லை...?... அது முகத்தில் இருக்கும் ஒருவித மான கரப்பான் தோல் வியாதி(eczema) போன்றிருக்கிறது என்று நான் எண்ணுகிறேன். அது சரியல்லவா? நீங்கள் கேட்டதை நீங்கள் சத்தியம் என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். உங்கள் குழந்தைக்கு வேறு ஏதோவொன்று கூட இருக்கிறது, இல்லையா? ஒருவகை யான ஆஸ்துமா பிரச்சனை. அது சரியல்லவா? கூறுங்கள், நீங்களும் கூட அவதி படுகிறீர்கள். ஒருவிதமான மூச்சை திணற வைக்கும் ஆவி (choking spirit) உங்களுக்கு இருக்கிறது. உள்ளான கழலை கட்டியோ (inward goiter) அல்லது ஏதோவொன்றுதான் உங்களுக்கு மூச்சுதிணற செய்கிறது என்று நான் - நான் நம்புகிறேன். அது சரியல்லவா? இன்னொரு காரியத்தை கூறுங்கள். உங்களுடைய இரட்சகராக இயேசு கிறிஸ்து உங்களுக்கு வேண்டும். அது சரியல்லவா? நீங்கள் ஒரு கிறிஸ்தவர் அல்ல. இப்போது நீங்கள் ஒரு கிறிஸ்தவராக விரும்புகிறீர்களா? நீங்கள் கிறிஸ்தவராக இருக்க விரும்புகிறீர்கள் என்று உங்களுடைய கையை உயர்த்தி இயேசுவிடம் சாட்சி கூறுங்கள். சர்வவல்லமையுள்ள தேவனே, இந்த பரிதாபமான இளம் தாயார் தன் குழந்தையை பிடித்தவாறு இங்கே நின்று இருக்கிறாள், சகலமும் நன்மைக்கு ஏதுவாகவே நடக்கிறது (ரோமர்-8:28) என்று எங்களுக்கு போதிக்கப்பட்டிருக்கிறது. தேவனே, இவளை சுகமாக்கும்; இவளுடைய தொண்டையிலிருந்து அந்த கழலை கட்டியை நீக்கி போடும். கர்த்தாவே, அதை நீக்கி போடும், இந்த பிரியமான குழந்தையை சுகமாக்கும். பாவ ஜீவியத்திலிருந்து இவளுடைய ஆத்துமாவை இரட்சியும். இன்றிரவு இவள் வீட்டிற்கு சந்தோஷமாக, களிகூர்ந்தபடியே செல்வாளாக, இந்த ஜனக்கூட்டத்திற்கு முன்பாக இப்போது இவள் உம்மை ஏற்றுக்கொண்டதால், இவர்கள் இருவரும் சுகமாகி, அவர்களுடைய ஜீவியத்தின் எல்லா நாட்களிலும் உமக்கு சேவை செய்வார்களாக. “மனுஷர்களுக்கு முன் பாக நீங்கள் என்னை பற்றி சாட்சி கூறினால், பிதாவிற்கு முன்பாக நான் உங்களை பற்றி அறிக்கையிடு வேன் (proclaim)” என்று நீர் கூறினீர். (மத்தேயு-10:32,33) (லூக்கா- 12:8,9) கர்த்தாவே, இவளை நீர் ஏற்றுக்கொண்டு, இவளை இரட்சித்து, வளை சுகமாக்கினதற்காக, நாங்கள் உமக்கு நன்றிகளை தெரிவிக்கிறோம், இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால். ஆமென். சகோதரியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்போது நீங்கள் என் சகோதரியாய் இருக்கிறீர்கள். உங்கள் பாவங்கள் உங்களுக்கு மன்னிக்கப்பட்டது; நீங்கள் சுகமாகிவிட்டீர்கள். குழந்தை முற்றிலும் சரியாகி விடுவான். சமாதானத்தோடே செல்லுங்கள், தேவன் உங்களோடு இருப்பாராக. 35. எல்லாம் சரி, வாருங்கள். நீங்கள் விசுவாசித்தீர்களா? ஏன் சுகமாகவில்லை? எது வந்தாலும், எது போனாலும் அது ஒரு பொருட்டே அல்ல, தேவன் தம்மை இப்போது உறுதிபடுத்தியிருக்கிறார். அவர் இங்கே பிரசன்னமாய் இருக்கிறார். யார் இந்த ஜனங்கள்? இரண்டு அல்லது மூன்று பேர் வந்திருந்தார்களே. அவர்களை என் ஜீவியத்தில் நான் கண்டதே இல்லை. அவர்களை பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது, அவர்களை பற்றி கேள்விப்பட்டதோ அல்லது என் ஜீவியத்தில் அவர்களை கண்டதோ இல்லை. இங்கே ஏதோவொன்று இருக்கிறது என்பதை நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும். அது இயற்கைக்கு மேம்பட்ட பரிமாணத்தில் (supernatural realm) இருக்கிறது என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும். இப்போது, விசுவாசி யுங்கள். அது இயேசு கிறிஸ்துவின் ஆவியாயிருக்கிறது, சில கழுதைகள் எங்கே கட்டப்பட்டிருக்கிறது என்பதை அறிந்திருந்த அந்த அதே ஒருவர், பிலிப்பு நாத்தான்வே லோடு வந்தபோது அவனிடம் கூறிய அதே ஒருவர், அவர், “இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்” என்றார். அவன், “ ஏன், நீர் என்னை எப்படி அறிவீர்?” என்றான். அவர், “பிலிப்பு உன்னை அழைக்கிறதற்குமுன்னே, நீ மரத்தின் கீழ் இருக்கும்போது” என்றார். ஏன், அவர் சொல்ல முயற்சிக்கவில்லை இப்போது... யூதர்கள், “ஓ, அவன் ஒரு நல்ல குறி சொல்லுகிறவன், பெயெல்செபூல்” என்று கூறினார்கள். ஆனால் பிலிப்போ, “நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா” என்றான். (யோவான்-1:47-49) “ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் இந்த காரியங்களை செய்ய முடியாது என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். ” (யோவான்-3:2) 36. சரி இப்போது, நீங்கள் இங்கே இருந்து, முழு சுவிசேஷ ஜனங்களாய் இல்லாமல், உங்களை பற்றின சிறு மூட நம்பிக்கைகளை கொண்டிருந்தால், உங்கள் வழியிலிருந்து அதை எடுத்துப்போடுங்கள். இந்த ஜனங்கள் பைத்தியக் காரர்கள் கிடையாது; அவர்கள் தங்கள் மீது தேவனுடைய ஆவியை பெற்றிருக்கிறார்கள். அவர்கள் உலகத்திற்கு முட்டாளாயிருக்கிறார்கள், ஆனால் அது அவர்களுக்குள் நகர்ந்து செல்லும் தேவனுடைய ஆவியாயிருக்கிறது. முன்னொரு காலத்தில் நானும் நீங்கள் இருக்கும் நிலையில் தான் இருந்தேன். ஆனால் விசுவாசிக்ககூடிய ஜனங்க ளோடு தேவன் என்னை சேர்த்தார். இப்பொழுது, உங்கள் இருதயத்தில் நீங்கள் கொண்டிருக்கும் சந்தேகத்தையும் மற்றவைகளையும் விட்டு விலகி, விசுவாசியுங்கள், நீங்களும் கூட பெற்றுக்கொள்வீர்கள், மகிமையாயிருங்கள் -- தேவனுடைய மகிமையை பெற்றுக்கொள்ளுங்கள். இங்கே ஒரு பெண் என் அருகே நின்றிருக்கிறாள். தேவனுடைய ஆவி இங்கே இருக்கிறது. இந்த சீமாட்டியை எனக்கு தெரியாது. இவளை என் ஜீவியத்தில் நான் கண்டதே இல்லை. ஆனால் நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கும் ஒரு கிறிஸ்தவள் (அது சரியல்லவா?). அது நடந்தபோது நீங்கள் மிகவும் உற்சாகமாக இருந்தீர்கள். அது சரியல்லவா? இப்பொழுது நீங்கள் காச நோயால் அவதிப்படுகிறீர்கள், அது வயிற்றிலிருக்கிறது. அது சரியல் லவா? அது கிறிஸ்து தானே அந்த... இப்போது, கர்த்தராகிய இயேசு உங்களை சுகப்படுத்தி விட்டார், சீமாட்டியே, நீங்கள் நன்றாக இருப்பீர்கள். சென்று சுகமாகுங்கள்...?... கிறிஸ்து. ஆமென். 37. வாருங்கள். இப்பொழுது...?... தேவனில் விசுவாசமா யிருங்கள். அவரை விசுவாசியுங்கள், அவர் அதை நிறை வேற்றுவார். வாருங்கள்... ?... நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் செய்யவேண்டிய ஒரே காரியம் என்னவென்றால் அது விசுவாசமாயிருப்பது மட்டுமே. தேவனை விசுவாசி யுங்கள், தேவன் அதை நிறை வேற்றுவார். யாரோ ஒருவர் ஜெபிக்கிறார். ஓ, பரிசுத்த ஆவியான வரால் சற்றே - சற்றே இந்த நிமிடம் என்ன செய்ய முடியும் (பாருங்கள்?), ஜனங்கள் அவரை அனுமதித்தால் அவரால் என்ன செய்ய முடியும். நீங்கள் சரியாக அங்கேயே சுகமாக முயற்சிக்கிறீர்கள். நீங்கள் என்னை பார்த்துக்கொண்டு உங்களால் முடிந்த அளவுக்கு முயற்சித்து, சுகமாக வேண்டு மென்று நீங்கள் ஜெபிக்கிறீர்கள். என் சகோதரனே, என்னால் - என்னால் உங்களை சுகப்படுத்த முடியாது, ஆனால் நீங்கள் என்னை பாருங்கள், உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்று என்னால் உங்களிடம் கூற முடியும். நான் உங்களிடம் இதை கேட்கிறேன், எனக்கு அன்னியராக நீங்கள் அங்கே உட்கார்ந்து இருக்கிறீர்கள். உங்களுடைய பிரச்சனை என்னவென்று தேவன் எனக்கு வெளிப்படுத்தினால், உங்களுடைய சுகமளித்தலை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? உங்க ளுக்கு குடலிறக்கம்(rupture) உள்ளது. அது சரியல்லவா? எல்லாம் சரி, அப்படியானால் எழுந்து நின்று, உங்களு டைய சுகமளித்தலை ஏற்றுக்கொண்டு, குணமாகுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. எல்லாம் சரி. எல்லாம் சரி. சகோதரனே, என்னை அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக்கி றீர்களா? நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்கள் என்று நான் – நான் நம்புகிறேன். ஆம், ஐயா. தேவன் மாத்திரம், தேவன் ஒருவர் மாத்திரமே. உங்களை என் ஜீவியத்தில் நான் கண்டதே இல்லை. ஆனால் அங்கே ஒரு... பரிசுத்த ஆவியானவர் இப்போது இங்கே இருக்கிறார் (பாருங்கள்?), எனக்கு – எனக்கு தெரிந்த ஒருவர் அது என்ன... யாரென்று நான் அறிவேன் - நான் யாரை விசுவாசித்தேனோ அவரை நான் அறிவேன். அவர் என்னிடம் கூறினார் என்பதை நான் அறிவேன். கூறப்பட்ட ஒவ்வொரு வார்த்தையையும் நான் விசுவாசிக்கிறேன். கூறுங்கள், சொல்லப்போனால், எனக் கும் உங்களுக்கும் நடுவே ஒரு பிரசங்க பீடம் இருப்பதை என்னால் காண முடிகிறது. நீங்கள் சுவிசேஷத்தின் ஒரு ஊழியக்காரர். அது சரியல்லவா? உங்களுடைய தொண்டை யில் உங்களுக்கு ஏதும் பிரச்சனை இருக்கிறதல்லவா? அது - அது சரியல்லவா? உங்களுடைய கையை உயர்த்துங்கள். எல்லாம் சரி. சர்வவல்லமையுள்ள தேவனே, உம்முடைய இந்த ஊழியக்காரனை சுகமாக்கும்; இது இவரை விட்டு விலகி, இவரை விட்டு இன்றிரவே நீங்கி செல்லட்டும். பிதாவே, இப்போது இவர், முழுமையாக ஆரோக்கியமடைவாராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அது போவதாக. இவருடைய ஜீவியத்தில் இதற்கு முன்பாக இவர் சுவிசேஷத்தை பிரசங்கித்ததை காட்டிலும் இன்னும் அதிகமாக பிரசங்கிப்பாராக. இயேசுவின் நாமத்தினால். ஆமென். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 38. உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? தேவனில் விசுவாசமாயிருங்கள். சந்தேகப் படாதீர்கள்; விசுவாசியுங்கள் போதும். அங்கே வரிசையில் இருப்பவர்களே, நீங்கள் விசுவாசித்தால் போதும் நீங்கள் இந்த வரிசையில் வர வேண்டியதில்லை. அங்கே இருக்கும் நீங்கள், நீங்கள் விசுவாசித்தால் போதும் நீங்கள் எந்த வரிசையிலுமே வர வேண்டியதில்லை, விசுவாசமாய் இருங்கள். நான் கண்டேன் ஒரு... சற்று முன்னர் நான் ஜெபித்த அந்த மனிதன் எங்கே போனார்? அங்கே இருக்கிறார். ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு - ஒரு பிரசங்க பீடம் இங்கே வரிசையில் இருப்பதை -- நான் கண்டேன், ஆனால் அதற்கு பின்னாக ஒரு பெண் நின்றுக்கொண்டு இருக்கிறாள். ஓ, அது அங்கிருக்கும் நீங்கள் ஒரு பெண் ஊழியக்காரிதானே, உங்கள் நுரையீரல் ஏதோவொரு பிரச்சனை இருக்கிறது, சகோதரியே, உங்களுக்கு இருக்கிறதுதானே? நுரையீரல் பிரச்சனையோ அல்லது உங்களுடைய நுரையீரலுடன் சேர்த்து அதில் வேறு ஏதோ பிரச்சனை இருக்கிறது இல்லையா. அது சரியல்லவா? தேவன் உங்களை குணமாக்குவார் என்று உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? எல்லாம் சரி, அப்படியானால் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் எழுந்து நின்று உங்களுடைய சுகமளித்தலை ஏற்றுக் கொள்ளுங்கள். 39. எல்லாம் சரி. வாருங்கள். சீமாட்டியே, உங்கள் முழு இருதயத்தோடும் நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? நான் தேவனுடைய ஊழியக்காரனாயிருந்தால், பின்பு தேவன் இங்கே இருக்கிறார். அது சரியல்லவா? நான் சத்தியத்தை கூறவில்லையென்றால், ஒன்றுக்குமே தேவன் சாட்சி கொடுக்க மாட்டார். அது சரியல்லவா? தேவன் தன்னுடைய வரத்திற்கு மாத்திரமே சாட்சி கொடுக்கிறார். நான் அதை அறிக்கை செய்து, அது தவறாயிருந்தால், பின்பு தேவன் என்னை அனுப்பவே இல்லை. அதுதான் சத்தியம் என்று நான் கூறினால், என்னை சந்தேகப்படுவதற்கு உங்களுக்கு உரிமை உண்டு; ஆனால் தேவனை சந்தேகப் படுவதற்கு உரிமை இல்லை. அப்படியானால் இப்போது இருப்பது தேவன். இப்போதிலிருந்து அது நானல்ல; நான் சற்று முன்னர் சாட்சிக் கொடுத்துக்கொண்டிருந்தேன், ஆனால் இப்போதோ அவர் சாட்சி கொடுத்துக் கொண்டு இருக்கிறார். அந்த சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை நீங்கள் மேற்கொள்ள வேண்டுமா? நீங்கள் மேற்கொள்ள வேண்டுமா? எல்லாம் சரி, அப்படியானால் செல்லுங்கள், கர்த்தராகிய இயேசு உங்களை நலமாக்கி, உங்களை இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் சுகமாக்குவாராக அப்படியா கட்டும்...?... "தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று நாம் கூறலாம்...?... எல்லாம் சரி. சகோதரியே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? எனக்கு... அந்த இருதயம் மீண்டும் சரியாக துடிப்பதை காண விரும்புகிறீர்களா? நீங்கள் விரும்புகிறீர்களா? உங்களுடைய கையை உயர்த்துங்கள், அது அதை செய்யும். கர்த்தராகிய யேசுவின் நாமத்தில் இவள் சென்று, இயேசுவின் நாமத்தினால் சுகமடைவாளாக. ஆமென். இப்போது, விசுவாசித்தபடியே செல்லுங்கள். விசுவாசித்த படியே தேவனுடைய நன்மைகளுக்காகவும் இரக்கத்திற்கா கவும் நன்றி கூறிக்கொண்டே செல்லுங்கள். 40. எல்லாம் சரி, அந்த சீமாட்டியை அழைத்துவாருங்கள். சீமாட்டியே, வாருங்கள். நீங்களும் இருதய பிரச்சனையை மேற்கொள்ள விரும்புகிறீர்கள், சகோதரியே, இல்லையா? உங்களுடைய கையை உயர்த்தி, “அதை இப்போதே நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று கூறுங்கள். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில்... ? ... ஆமென். எல்லாம் சரி, வாருங்கள். தற்செயலாக, உங்களுக்கு பெண்களுக்கான பிரச்சனையும், கூடவே இருதய பிரச்ச னையும் இருக்கிறது. அது சரியல்லவா? உங்களுடைய கையை உயர்த்தி, “என் சுகமளித்தலுக்காக நான் தேவனுக்கு நன்றிகளை தெரிவிக்கிறேன்” என்று கூறுங்கள். தொடர்ந்து செல்லுங்கள்...? விசுவாசித்தபடியே, விசுவாசத்தோடு, செல்லுங்கள். சீமாட்டியே, வாருங்கள். நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கூறுங்கள், அங்கே உட்கார்ந்து இருக்கும் சீமாட்டியே, அந்த உயர் இரத்த அழுத்தத்தை நீங்கள் மேற்கொள்ள விரும்பு கிறீர்களா, அந்த கடைசியில் உட்கார்ந்து இருப்பவரே? நீங்கள் மேற்கொள்ள விரும்பினால், எழுந்து நில்லுங்கள், அது சரியாக அப்போதே உங்களை விட்டு போய்விட்டது அப்போதே, சீமாட்டியே, நீங்கள் மாத்திரம் தொடர்ந்து விசுவாசித்தால் நீங்கள் எப்போதுமே அதை மேற்கொள்வீர்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. விசுவாசமாயிருங்கள். எல்லாம் சரி, சகோதரியே, என்னை தேவனுடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? எனக்கும் உங்களுக்கும் நடுவே ஒரு மேஜை நிற்கிறது. நீங்கள் அதை விட்டு பின்னே நகருகிறீர்கள், அந்த மேஜையை விட்டு, ஏனெனில் உங்களுக்கு வயிற்று கோளாறு இருக்கிறது. அது வயிற்றிலிருக்கும் குடல் புண் (peptic ulcer). அது சரியல்லவா? எல்லாம் சரி. கர்த்தராகிய இயேசுவே, நீர் இவளை சுகமாக்க வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன், இன்றிரவு இவள் இங்கிருந்து சென்று, குணமாவாளாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால். ஆமென். செல்லுங்கள். அவர் அதை கூறினார், இப்போது அவரை விசுவாசியுங்கள்; தேவனை துதித்து கொண்டே இருங்கள். 41. நீங்கள் விசுவாசித்தால் போதும், உங்களில் ஒவ்வொரு வருமே சுகமாகலாம். கர்த்தருடைய பிரசன்னம் அருகில் இருக்கிறது. உங்களை சுகமாக்கும்படி கர்த்தருடைய பிரசன்னம் இங்கே இருக்கிறது. சீமாட்டியே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? உங்களுக்கிருக்கும் அந்த ஆஸ்துமா நோயை நீங்கள் மேற்கொள்ள விரும்புகிறீர்களா? “என்னை சுகமாக்கியதற்காக தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று கூறுங்கள். செல்லுங்கள், உங்கள் முழு இருதயத் தோடும் அதை விசுவாசியுங்கள், தேவன் அதை நிறை வேற்றுவார். விசுவாசமாயிருங்கள்...? ... சீமாட்டியே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அந்த கீல்வாதத்தை (Arthritis) மேற்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுடைய கையை உயர்த்தி, "கர்த்தாவே, நான் விடுதலையாயிருக்கிறேன். நீர் என்னை விடுதலையாக்கி விட்டீர்” என்று கூறுங்கள். நீங்கள் மேடையை விட்டு கீழே “தேவனுக்கு நன்றி” என்று களிகூர்ந்த படியே கூறிக் கொண்டு செல்லும்போது, இந்த நடக்க உதவும் குச்சிகளை (canes) கீழே வைத்துவிடுங்கள். [ஒலிநாடாவில் காலியிடம் - ஆசி] 42. உங்களுக்கு மனம் சார்ந்த தொல்லைகள் இருக்கின்றது, மன அழுத்தம்; சூரியன் மறைய ஆரம்பிக்கும்போது சாயங்கால நேர முடிவில், நீங்கள் மிகவும் பதட்டமாக தொடங்குகிறீர்கள். அது சரியல்லவா? நீங்கள் முழுவதும் உடைந்து போய்விடுகிறீர்கள். நீங்கள் மாதவிடாய் முடியும் தருவாயிலிருக்கிறீர்கள்; உங்களால் உணவுகளை சாப்பிட முடியாத அளவுக்கு அது உங்களுக்கு வயிற்று பிரச்சனையை ஏற்படுத்துகிறது: அமிலமாக மாற்றுகிறது. அது சரியல்லவா? உங்களுடைய கையை உயர்த்தி, “கர்த்தாவே, நான் உம்மை விசுவாசிக்கிறேன்” என்று கூறுங்கள். செல்லு ங்கள்...?...இப்போது களிகூர்ந்தபடியே, “தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று கூறிக்கொண்டே. எல்லாம் சரி. “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று நாம் கூறலாம். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், நீங்கள் சென்று யேசுவின் நாமத்தில் சுகமாவீர்களாக. ஆமென். “தேவனுக்கே நன்றி” என்று கூறுங்கள். எல்லாம் சரி. சீமாட்டியே, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் நீங்கள் சென்று, சுகமாகி, முழுமையாக ஆரோக்கியமடைவீர்களாக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் மூலமாக. ஆமென். “தேவனுக்கே ஸ்தோத் திரம்” என்று நாம் கூறலாம். இப்போதுதான் நேரம் சுகமாக்கும் படி கர்த்தருடைய பிரசன்னம் இங்கே இருக்கிறது. தண்ணீர்களானது கலக்கப் பட்டிருக்கிறது. உள்ளே இறங்குவதற்கு இதுவே சமயம்; இதுதான் சத்தியம். தேவன் சத்தியத்தை உறுதிப்படுத்து கிறார். இந்த சமயத்தில் ஏன் உங்களால் முடியாது? இங்கே பாருங்கள். நீங்கள் கொண்டிருக்க வில்லை... நீங்கள் செய்ய வேண்டியது எதுவென்றால் விசுவாசமாயிருப்பதேயாகும். நீங்கள் வித்தியாசமாக உணருகிறீர்கள், இல்லையா? அது சரி. 43. அங்கே நாற்காலியில் உட்கார்ந்து இருக்கும், சீமாட்டியே, இங்கே பாருங்கள். நீங்கள் இங்கே மேலே வரவேண்டிய தேவையே இல்லை. நீங்கள் விசுவாசிக் கிறீர்களா? என்னை அவருடைய தீர்க்கதரிசி என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? பின்பு அது அப்படியிருந்தால், ஏன், நீங்கள் இங்கே நின்றுகொண்டிருக்க தேவையில்லை. நீங்கள் அங்கே உட்கார்ந்து இருக்கும்போதே என்னால் கூற முடியும். அது சரியல்லவா? உங்களுக்கு பெண்களுக்கான பிரச்சனை இருக்கிறது. அது சரியல்லவா? அது கருப்பையிலிருக்கும் சீழ் கட்டி உங்கள் கையை உயர்த்துங்கள். உங்களில் யாரேனும் யாருக்காவது பெண்களுக்கான பிரச்சனை இருந்தால், உங்கள் கையை உயர்த்துங்கள். அது சரியல் லவா? இப்போது, முற்றிலும் திரும்பி வரிசைக்கு பின்னாக சென்று சுகமாகுங்கள். “தேவனுக்கு ஸ்தோத்திரம்” என்று நாம் கூறலாம். நீங்கள் அதை ஏற்றுக்கொண்டால், சரியாக இப்போதே அவர் உங்களை சுகமாக்குவார் என்பதை நீங்கள் விசுவாசிக் கவில்லையா? நாம் நிற்கலாம்... ? ... அது பின்பு, ஒவ்வொரு இடங் டங்களிலும் எழுந்து நில்லுங்கள். இப்பொழுது, நாம் ஜெபிக்கலாம். நம்முடைய கைகளை உயர்த்தலாம். நாம்...? தேவன் மட்டுமே... அன்பான இயேசுவே, உமக்கு நாங்கள் நன்றிகளை தெரிவிக்கிறோம்... ? ... என் இருதயம்... ஆவியானவர் இறங்கட்டும். இவர்களில் ஒவ்வொருவரையும் நீர் சுகமாக்குவீராக. இன்றிரவு இவர்கள் இந்த கட்டிடத்தை விட்டு களிகூர்ந்தபடியே சந்தோஷமாக செல்வார்களாக...?...